வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தாமரைக் கிழங்கு நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Updated On: November 14, 2025 1:29 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தாமரைக் கிழங்கு நன்மைகள்

இன்றைய பதிவில் தாமரைக் கிழங்கு நன்மைகள் பற்றி  பார்க்க போகிறோம். குளம், ஏறி  போன்ற நீர் நிலைகளில் காணப்படும் தாமரை வேர்களில் அதிக நன்மைகள் உள்ளன. நம் அனைவருக்கும் தாமரை பூவும் அதனை கடவுளுக்கு வைப்பது மட்டும் தான் தெரியும். ஆனால் இந்த நீர்வாழ் பூவானது தாமரை தன்னுள் ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. தாமரை பூ, இலைகள், வேர் , விதை போன்ற அனைத்து பாகங்களும் நன்மையை அளிக்கிறது.   காய்கறியில் நிறைய வகைகள் இருக்கின்றன.

 ஆனால் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி கிழங்கு வகையில் பெரும்பாலும் விரும்புவது உருளைக்கிழங்கு தான். அத்தகைய உருளைக்கிழங்கு வரிசையில் தாமரை கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை சாப்பிடும் அளவிற்கு நாம் யாரும் தாமரைக் கிழங்கு சாப்பிடுவதில்லை. ஆனால் நமக்கு தெரியாத நிறைய மருத்துவ குணங்கள் தாமரைக் கிழங்கில் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில்  தாமரைக் கிழங்கு நன்மைகள் பற்றி  பார்க்கலாம் வாங்க…

வயிறு பிரச்சனை நீங்க:

குடல் புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த தாமரைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடைய முடியும். மேலும்,தாமரை கிழங்கு சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை மேம்பட செய்கிறது.

சரும பாதுகாப்பு:

வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்து சரும பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இவை சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளன. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைத் தடுக்க இந்த வைட்டமின்கள் உதவுகின்றன மற்றும் அணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இதய ஆரோக்கியம்:

அடிக்கடி நாம் தாமரைக்கிழங்கு சாப்பிடும் போது மாரடைப்பு, இதய ரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. 

கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்:

கருப்வில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம்.தாமரை வேரில் இருக்கும் போலேட் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நரம்பு குழாய் குறைபாடுகள் போன்ற ஆபத்தான குறைபாடுகளை போக்க உதவுகிறது. தாமரை வேரில் இருக்கும் கோலின் மற்றும் இரும்புச்சத்து கால்சியத்தை வழங்குகிறது. இது ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.

காய்ச்சல் குறைக்க உதவுகிறது:

How To Prevent Fever At Home,காய்ச்சல் வர்ற மாதிரி இருந்தா இந்த கஷாயம்  குடிங்க, காய்ச்சல் வராது, எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்! - home made  kashayam by using tulsi ...

தாமரை வேர் பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல்,சளி மற்றும் காய்ச்சல் போன்ற அழற்சியை போக்க உதவுகிறது. 

மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா..?

தாமரை தண்டு ஊட்டச்சத்து:

  • கலோரிகள் -40 கிராம்
  • கொழுப்பு -0
  • சோடியம் – 27 மி.கி
  • கார்போஹைட்ரெட்-10 கி
  • நார்ச்சத்து-2 கி
  • சர்க்கரை-0.3 கி
  • புரோட்டின் -1 கி 

மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்புசத்து, மெக்னீசியம் மற்றும் கோலைன், விட்டமின் சி போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

தாமரைக்  கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?

தாமரைக் கிழங்கை  சர்க்கரை நோயாளிகள், மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தாமரைக் கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

முக்கிய குறிப்பு:

  • கர்ப்பிணி பெண்கள் தாமரைக் கிழங்கை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையயை கேட்டு நடப்பது சிறந்தது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now