அடிக்கடி தசைகள் இழுக்கிறதா? அப்படின்னா உங்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்..!

Advertisement

அடிக்கடி தசை இழுப்புக்கு என்ன காரணம்? | Thasai Pidippu Symptoms in Tamil

பொதுவாக நாம் உடலில் ஏற்படும் சில உணர்வுகளை நாம் அலட்சியமாக நினைத்துக்கொள்வோம். பின் அதுவே நமக்கு பெரும் பிரச்சனையாக வந்து நிற்கும். அவற்றில் ஒன்று தான் அடிக்கடி உடலில் தசைகள் இழுப்பது. இந்த பிரச்சனையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அடிக்கடி தசைகள் பிடித்துக்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது அவற்றில் ஒன்று தான் மக்னீசியம் குறைபாடும் ஆகும். இது ஒரு ஊட்டச்சத்தாகும், உடலில் இந்த ஊட்டச்சத்து குறையும்போது பல உபாதைகளை நமக்கு ஏற்படுத்தும் அது என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

அடிக்கடி சதைகள் இழுத்துக்கொள்ள என்ன காரணம்?

எலும்புகளின் செயல்பாட்டிற்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியமோ அதேபோல் தசைகளின் செயல்பாட்டிற்கு மக்னீசியம் சத்து மிகவும் முக்கியமான ஒன்று. ஆக உடலில் மக்னீசியம் சத்து குறையும் போது தசைகள் வலுவிழந்து இழுப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

நமது உடலில் தசைகள் ரிலாக்ஸாக இருக்க மக்னீசியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆக மக்னீசியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை உங்கள் உணவில் அதிகம் செய்துகொள்வது நல்லது.

மக்னீசியம் குறைப்பட்டால் ஏற்படும் தசைப்பிடிப்பு அறிகுறிகள்:

உடல் பலவீனம், வாந்தி, குமட்டல், சோர்வு, பசியின்மை, உடலில் கால்சியம் குறைபாடு, உடலில் பொட்டாசியம் குறைபாடு, வலிப்பு பிரச்சனைகள், தசை பிடிப்பு, இதய தசை பிடிப்பு, இதயத்துடிப்பில் மாற்றம், உணர்ச்சியின்மை, கூச்ச உணர்வு இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்

மக்னீசியம் நிறைந்த உணவுகள்:

டார்க் சாக்லேட், அவகோடோ, பச்சை காய்கறிகள், பச்சை கீரைகள், முழு தானியங்கள், வாழைப்பழம், கொழுப்பு மீன்கள், நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் மக்னீசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆக இந்த உணவுகளை உங்கள் உணவு முறையில் அதிகம் பரிந்துரைக்கலாம்.

மக்னீசியம் பயன்கள்:

நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முறையாக நமது உடலில் சேர்வதற்கு இந்த மக்னீசியம் சத்து பயன்படுகிறது.

உணவை ஆற்றலாக மாற்றும் வேலைக்கு மக்னீசியம் உறுதுணையாக இருக்கிறது.

தைராய்டு சுரப்பி சரியாக இயங்க மக்னீசியம் பயன்படுகிறது. இந்த சுரப்பியிலிருந்து தான் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் ஹார்மோன்கள் சுரக்கின்றன.

ஒரு நாளுக்கு எவ்வளவு மக்னீசியம் உடலுக்கு தேவை:

  1. ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் மக்னீசியம் தேவைப்படும்.
  2. பெண்களுக்கு ஒரு நாளைக்கு 270 மில்லி கிராம் மக்னீசியம் தேவைப்படும்.
  3. ஒருவருடைய உடலில் 400 மில்லி கிராமிற்கு மேல் மக்னீசியம் இருந்தால் அது வயிற்று போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடுமாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement