துத்தி இலையின் மருத்துவ பயன்கள்
இன்றைய பதிவில் தவசி கீரையின் பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். தவசி கீரையில் வைட்டமின் ஏ,பி,பி-2,சி,டி,கே போன்ற விட்டமின்கள் நிறைந்துள்ளன. தவசி கீரைக்கு மல்டி வைட்டமின் கீரை மற்றும் ஹார்லிக்ஸ் கீரை என்ற மாற்றோரு பெயரும் உண்டு. தவசி கீரையில் நார்ச்சத்து ,புரதச்சத்து, தாம்பரம் ,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், தவசி இலை பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, வெள்ளைப்படுதல்,எலும்பு தேய்வு, தலைவலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.இந்த கீரையை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் இதில் அதிக மருத்துவ குணம் உள்ளது. இந்த பதிவில் தவசி கீரையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
தவசி கீரையின் நன்மைகள்:
சிறுநீரக கற்கள் :

தவசி கீரையில் அதிக சத்துக்கள் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், தயமின், மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தவசி கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக பிரச்சனையை சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
தலைவலி:
தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் தவசி கீரையை இரண்டு மிளகுடன் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும்.
இரத்த சோகை:

தவசி கீரையில் நார்ச்சத்து,புரதச்சத்து,மாவுச்சத்து,பாஸ்பரஸ், விட்டமின் எ போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள் தவசி கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தை அதிகரிக்க செய்கிறது. தவசி கீரை இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
வெள்ளைப்படுதல் :
பெண்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. தவசி இலையின் சாறை எடுத்து தினமும் குடித்து வந்தால் வெள்ளை படுத்தல் பிரச்சனை குணமாகும்.
சளி,இருமல்:

சளி இருமல் பிரச்சனை இருப்பவர்கள் தவசி இலை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகிவிடும். மேலும், இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். குழந்தை ஆரோக்கியமாக வளர தவசி கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
பல்வலி:
தவசி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் வாய்ப்புண் முற்றிலும் சரியாகிவிடும். வாரம் முறை இப்படி செய்வதன் மூலம் பல்வலி பிரச்சனையை சரிசெய்கிறது.
மூட்டு வலி :
மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், எலும்பு’தேய்மானம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தவசி இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
சரும பிரச்சனை :
முகத்தில் முகப்பரு கரும்புள்ளி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தவசி கீரை மஞ்சள் மற்றும் கற்றாழை ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி வருவதன் மூலம் முகப்பரு ,கரும்புள்ளி போன்ற சரும பிரச்சனையை ஏற்படாமல் சரி செய்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














