தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

Advertisement

தேன் நெல்லிக்காய் தீமைகள் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தேன் நெல்லிக்காய் அதிகமாக சாப்பிடுவதால் உடலிற்கு ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அனைவருக்கும் தேனும் மிகவும் பிடிக்கும். நெல்லிக்காயும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு உணவு பொருட்களிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, இவை இரண்டினையும் சேர்த்து நன்கு ஊறவைத்து சாப்பிடுவது தான் தேன் நெல்லிக்காய்.

தேன் நெல்லிக்காய் நம் உடலிற்கு பலவிதான ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதனை அளவுக்கு அதிகமாகவோ அல்லது தினமும் சாப்பிட்டு வருவதாலோ நம் உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தேன் நெல்லிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Honey and Amla Side Effects in Tamil | தேன் நெல்லிக்காய் தீமைகள்:

 

தேன் நெல்லிக்காய் தீமைகள் 

அதிக ஆக்சலேட் உள்ளது:

ஆக்சலேட்டுகள் என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட பல உணவு பொருட்களில் காணப்படும் இயற்கையான பொருள் ஆகும். தேன் நெல்லிக்காயில் அதிக ஆக்சலேட் உள்ளது. தேன் நெல்லிக்காய்களின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று அதிக ஆக்சலேட் இருப்பது ஆகும்.

சிலருக்கு அதிக ஆக்சலேட் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுநீரக கற்கள் இருந்தாலோ அல்லது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் இருந்தாலோ தேன் நெல்லிக்காயை குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா..? அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி..?

அழற்சி பிரச்சனை:

சிலருக்கு தேன் நெல்லிக்காய் அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அரிப்பு மற்றும் படை நோய் மற்றும் சுவாசிப்பதில் பிரச்சனை போன்ற ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும்.

இரைப்பை குடல் கோளாறுகள்:

தேன் நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் இரைப்பை குடல் கோளாறுகள் ஏற்படலாம். சிலருக்கு வீக்கம், வாயு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

வெப்பத்தை ஏற்படுத்தும்:

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே, தேன் நெல்லிக்காயை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

1 கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நடக்குமா..? இது தெரியாம போச்சே..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

 

Advertisement