பூவரசு மரத்தில் இவ்வளோ மருத்துவ குணங்கள் உள்ளதா..! இது தெரியாம போச்சே..!

Thespesia Populnea Benefits in Tamil 

Thespesia Populnea Benefits in Tamil 

இன்றைய பதிவில் நாம் கிராமங்களில் அனைவரின் வீட்டிலேயும்,தெருக்களிலும்  உள்ள ஒரு மரமான பூவரசு மரத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் அனைவருமே இந்த பூவரசு மரத்தின் இலையில் பீபி செய்து ஊதி விளையாடிருப்போம். ஆனால் அப்படி விளையாடும்பொழுதெல்லாம் இந்த மரத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஏன் இப்பொழுது கூட இதன் மருத்துவ குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கும் இந்த பூவரசு மரத்தின் மருத்துவ குணங்களை பற்றி தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த பதிவில் அதன் மருத்துவ குணங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

மகோகனி மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா

Thespesia Populnea Medicinal Uses in Tamil:

பொதுவாக நமது முன்னோர்கள் அனைவரின் வீட்டிலேயும் ஒரு பூவரசு மரத்தை வைத்திருந்தார்கள் இதற்கு காரணம் இந்த மரத்தின் மருத்துவ குணங்களை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்ததுதான். அதனால் அவற்றில் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

Uses of Thespesia Populnea in Tamil:

Uses of Thespesia Populnea in Tamil

இந்த பூவரசு மரம் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்வதினால் நாம் இந்த மரத்தினை நமது வீடுகளில் வைத்திருப்பதின் மூலம் நம்மால் நல்ல தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.

இதன் இலைகளை பறித்து நன்கு சுத்தபடித்துவிட்டு அதனை நன்கு பசைபோல் அரைத்து உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல் குணமாகும்.

வில்வம் மருத்துவம் பயன்கள்

Thespesia Populnea Fruit Uses in Tamil:

Thespesia Populnea Fruit Uses in Tamil

அடுத்து இதன் காய்களை அரைத்தும் கூட உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல்கள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு சில நேரங்களில் நமது உடல்களில் வீக்கம் ஏற்படும் அப்பொழுது இந்த பூவரசு மரத்தின் காய்களை பறித்து நன்கு அரைத்து உடலில் உள்ள வீக்கத்தின் மீது தடவி வருவதன் மூலம் வீக்கம் குணமாகும்.

Poovarasu Tree Uses in Tamil:

Poovarasu Tree Uses in Tamil

சிலருக்கு தோல்களில் வறட்சி ஏற்பட்டு மீன் செதில் போல் உரிந்து கொட்டும் அப்படி உள்ளவர்கள் இந்த மரத்தின் பட்டைகளை உரித்து அதனை தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தொடர்ந்து  தடவி வருவதன் மூலம் 28 நாட்களில் தோல்களில் ஏற்படும் வறட்சி குணமாகும்.

அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அது குணமாகவே ஆகாது என்று கூறுவார்கள். அவர்களும் இந்த பூவரசு மரத்தின் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வைத்து புண்கள் உள்ள இடங்களை கழுவி வருவதன் மூலம் அந்த புண்கள் குணமாகும்.

யூகலிப்டஸ் மரம் பற்றிய தகவல்

Thespesia Populnea Uses in Tamil: 

Thespesia Populnea Uses in Tamil

பொதுவாக பெண்களுக்கு கழுத்தில் நகைகள் அணிவதினால் கருப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு இந்த பூவரசு மரத்தின் பூக்களை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி அந்த எண்ணெயை தடவி வருவதன் மூலம் அந்த கருப்பு நிறம் விரைவில் மறைந்து விடும்.

இந்த பூவரசு மரத்தில் மேலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் இந்த பூவரசு மரத்தை நாம் அனைவரின் வீட்டிலையோ அல்லது தெருக்களிலையோ வைத்து வளர்த்து பயன்பெறுங்கள்.

 பனைமரம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil