சாப்பிட்ட பின் செய்யக்கூடாதவை..!
ஹாய் பிரண்ட்ஸ் பொதுவாக நாம் சாப்பிட்ட பிறகு செய்யும் சில விஷயங்கள்.. நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக பெரிய பிரச்சனைகளை ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது இந்த பதிவில் சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 7 விஷயங்களை பற்றி பகிர்ந்துள்ளோம். ஆகவே சாப்பிட்ட பிறகு அந்த தவறுகளை மட்டும் எப்பொழுதுமே செய்துவிடாதீர்கள் நண்பரர்களே.. பிறகு நீங்கள் தான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சரி வாங்க சாப்பிட்ட பிறகு செய்ய கூடாத விஷயங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
No. 1: சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது:
சிலர் சாப்பிட்டவுடனேயே குளிக்க செல்வார்கள். இத்தகைய செயலை இனி எப்பொழுதுமே செய்யாதீர்கள் ஏனென்றால்.. நாம் சாப்பிட்ட உடனேயே நமது உடல் அந்த உணவை செரிமானம் செய்வதற்க்கான வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.. ஆகவே அந்த சமயத்தில் நாம் குளித்தால் நமது கை, கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக செரிமான மண்டலத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் நமக்கு செரிமானம் மந்த நிலை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே சாப்பிட்ட உடன் எப்பொழுதும் குளிக்க செல்லாதீர்கள். வேணுமென்றால் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரம் முன் அல்லது பின் குளிக்க செல்லுங்கள்.
No. 2: சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிட கூடாது:
பலர் உணவருந்திய பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்ல பழக்கம் என்று நினைத்து கொண்டிருக்கின்றன, ஆனால் இது ஒரு தவறான எண்ணமாகும். பொதுவாக பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது என்பதால் நாம் உணவருந்திய பிறகு சாப்பிட்ட பழங்கள் தான் முதலில் ஜீரணமாகும். அதேபோல் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் ஃபுட் பாய்சன் ஆக்குவதற்கு அதிக வாய்ப்புகளை உண்டாக்கும். ஆகவே உணவருந்திய பின் பழங்கள் சாப்பிடுவதனை முற்றிலும் தவிர்க்கவும். அப்பறம் எப்போ பழங்களை சாப்பிடணும்னு உங்களுக்கு தோணும். அதாவது உணவருந்துவதற்கு முன் அல்லது பின் இரண்டும் மணி நேரம் கழித்து தான் பழங்களை சாப்பிட வேண்டும்.
No. 3: சாப்பிட்டவுடன் தூங்குவது:
பொதுவாக நம் உடல் சாப்பிட்ட ஆரம்பித்த உடனேயே அவற்றை செரிமான செய்வதற்கான வேலையை செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது நாம் படுத்துவிட்டோம் என்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் தொண்டையை நோக்கி வர ஆரம்பித்துவிடும். இது மட்டும் இல்லாமல் நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் தொண்டை வரை வந்து தொண்டை எரிச்சலை உண்டாக்கிவிடும். மேலும் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே சாப்பிட்டவுடன் படுக்க செல்லாதீர்கள்.
No. 4: சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்ய கூடாது:
இப்போது எல்லாம் பலர் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக. சாப்பிட்ட உடனேயே வேகமாக செல்வது, ஓடுவது, கடினமான வேலைகளை செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல செயல்களை செய்கின்றன. இத்தகைய செயல்களை சாப்பிட்ட உடனேயே செய்ய கூடாது. ஏனென்றால் சாப்பிட்ட உடன் நாம் உடற்பயிற்சி செய்தோம் என்றால் சாப்பிட்ட உணவுகளின் சத்துக்கள் உடலில் போய் சேர்வதில் தடைகள் ஏற்படும்.
உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் மற்றும் உடலில் உள்ள பிற பாகங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதேபோல் செரிமான உறுப்புகளில் இரத்த ஓட்டம் குறையும். இதனால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனையை ஏற்படும். முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் நமது உடலில் போய் சேராது. ஆகவே சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சியை காலை வெறும் வயிற்றி செய்வது நல்லது அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்.
No. 5 சாப்பிட்டவுடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது:
சிலர் சாப்பிடும் போதே நிறைய தண்ணீர் அருந்திக்கொண்டே இருப்பார்கள், அதேபோல் சாப்பிட்ட பிறகும் கூட வயிறுமுட்ட தண்ணீர் குடிப்பார்கள், இவ்வாறு செய்வது மிகவும் தவறாகும். பொதுவாக வயிற்றில் உள்ள அமிலமானது 1.5 முதல் 3ph வரைக்கும் இருக்குமாம். இந்த அளவில் தான் நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து நன்கு செரிமானம் அடையும். ஆனால் நாம் சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடித்தோம் என்றால், செரிமானத்திற்கு தயாராக இருக்கும் HCL அமிலம் நீர்த்துவிடுமாம். இதனால் நாம் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுமாம். ஆகவே சாப்பிட்டவுடனேயே தண்ணீர் அதிகம் அருந்திவிடாதீர்கள். 1/2 மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்துங்கள்.
No. 6 சாப்பிட்டவுடன் டீ, காபி குடிக்க கூடாது:
நாம் சாப்பிட்டவுடனேயே டீ மற்றும் காபி போன்ற திரவங்களை அருந்த கூடாது. ஏனென்றால் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் நாம் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் நம் சாப்பிட்ட உணவில் உள்ள அத்தியாவசியமான சத்தான இரும்பு சத்துக்கள் உடலில் போய் சேர்வது தடுக்கப்படுகிறது. ஆகவே சாப்பிட்ட உடன் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
No. 7 சாப்பிட்ட பின் செய்யக்கூடாதவை:
பொதுவாக யாராக இருந்தாலும் சரி.. சாப்பிடும் பொழுது டிவி பார்த்துக்கொண்டோ, மொபைல் யூஸ் செய்து கொண்டோ, வேடிக்கை பார்த்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ சாப்பிட கூடாது இதுபோன்ற செயல்களை எப்பொழுது செய்யாதீர்கள். சாப்பிடும்பொழுது உங்களது கவனம் உணவில் தான் இருக்க வேண்டுமே தவிர வேறு எங்கும் இருக்க கூடாது.
ஓகே பிரண்ட்ஸ் சாப்பிட்டவுடனேயே செய்ய கூடாத விஷயங்களை பற்றி இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இனி இத்தகைய தவறுகளை எப்பொழுது செய்யாதீர்கள் நன்றி வணக்கம்..
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |