Things To Observe During Ramadan Fasting in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ரம்ஜான் நோன்புவின் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக இப்போது ரமலான் நோன்பு காலம் தொடங்கிவிட்டது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மார்ச் 12 முதல் துவங்கி உள்ளது. இதில் இருந்து இனி இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் இருந்து நோன்பு விரதத்தை கடைபிடிப்பார்கள்.
அதாவது அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு விட்டு பகல் முழுவதும் விரதம் இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவின் இன்று இதுபோல ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரத்தில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
ரமலான் நோன்பு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..
ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
இதுபோல நாம் தினமும் ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரத்தில் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல உடலில் சோர்வு ஏற்படாமலும் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். எனவே இப்போது நாம் என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உணவுமுறை:
- கார்போஹைட்ரேட்டுகள், லீன் புரோட்டீன்கள், ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகள் மற்றும் நார்சத்து நிறைந்த உணவு பொருட்கள் போன்ற சரிவிகித உணவுகளை உண்பது நல்லது. காரணம், இதுபோன்ற சரிவிகித உணவுகள் உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. மேலும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
- அதுபோல காலை வேளையில் நீங்கள் ஓட்ஸ், முட்டை, தயிர் மற்றும் முழு தானியங்கள் போன்ற விரைவாக செரிமானமாகும் உணவுகளை உண்பது நல்லது. இதனால் உங்களுக்கு நாள் முழுவது ஆற்றல் கிடைக்கும்.
- நீங்கள் சாப்பிடும் உணவை பொறுமையாகவும், நன்றாக மென்றும் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால், பசியை கட்டுப்படுத்த முடியும்.
- அதுபோல உங்களுடைய காலை உணவு பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளாக எடுத்து கொள்ளலாம்.
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி..
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- நோன்பு காலத்தில் நீங்கள் காஃபைன் மற்றும் அதிக உப்பால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் அதிக உப்பால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டால், அது அதிக தாகம் மற்றும் நீர் இழப்பை ஏற்படுத்தும்.
- அதுபோல நோன்பு இருக்கும் போது, பொரித்த உணவுகள் அதாவது எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. காரணம் இதுபோன்ற உணவுகளை உண்ணும் போது அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி செய்தல்:
ரம்ஜான் நோன்புவின் போது, சில நேரங்களில் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். மேலும் நடைபயிற்சி, யோகா அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றை நீங்கள் செய்யலாம். இதன் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த முடியும்.
மேலும் ஆழ்ந்த மூச்சு பயிற்சி, தியானம், பிரார்த்தனை மற்றும் உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவை மூலமாக மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
இதுபோல நீங்கள் உங்கள் ரம்ஜான் நோன்புவை கடைப்பிடித்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |