திருநீற்று பச்சிலை பயன்கள்
திருநீற்று பச்சிலை என்பது ஒரு மூலிகை வகையான இனிப்பு துளசி ஆகும். இந்த வகை செடி அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. இதற்கு உத்திரசடை, விபூதி பச்சிலை,சப்ஜா,திருநீற்று பத்திரி போன்ற பல பெயர்களை கொண்டுள்ளது. மருத்துவ குணம் உள்ள திருநீற்று பச்சிலை அதிக நறுமணத்தை கொண்டிருக்கும். இது அதிகமாக மலைப்பகுதிகளில் காணப்படும். இந்த வகை செடிகள் கோவில்களில் வளர்க்கப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் இனிப்பு சுவையை கொண்டியிருக்கும். இந்த விதையை சப்ஜா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. குறைவான கலோரிகளை கொண்டுள்ள திருநீற்று பச்சிலையில் கால்சியம்,பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.
திருநீற்று பச்சிலை நன்மைகள்:
காய்ச்சல்
காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது உடலில் உள்ள கெட்ட நீர் உடலை கனமாக வைத்திருக்கும். இதன் இலையை பறித்து சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால். உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி உடம்பை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
உடல் சூடு குறைய
கோடை காலத்தில் வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை தவிர்க்க சப்ஜா விதையை நீரில் போட்டு தினமும் குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.
வாந்தியை கட்டுப்படுத்த
வாந்தி பிரச்சனைகள் கொண்டியிருப்பவர்கள் வாந்தியை குணப்படுத்த திருநீற்று பச்சிலை உதவுகிறது. இந்த இலையில் சாறு எடுத்து சம அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வாந்தி பிரச்சனைகள் குறைந்துவிடும்.
முகப்பரு,கரும்புள்ளிகள்
திருநீற்று பச்சிலையை அரைத்து உங்கள் முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் நீக்கிவிடும். தேமல் மற்றும் விஷக் கடி பிரச்சனைக்கு திருநீற்று பச்சிலை தீர்வாக உள்ளது.
காது வலி
காது வலி மற்றும் காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் திருநீற்று இலையின் சாறை காதில் ஊற்றவும். இது காது வழியை குணமாக்கி,சீழ் வடிவதை நிறுத்திவிடும். இந்த சாறை உணவில் எடுத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்துவிடும்.
செரிமான பிரச்சனை
திருநீற்று பச்சிலை செரிமான பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
வியர்வை வாடை நீங்க
உடலில் வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் வாசனை திராவியங்கள் தேடுவோம். திருநீற்று பச்சிலையை பயன்படுத்துவது இதற்கு தீர்வாக இருக்கும்.
குளிக்கும் நீரில் திருநீற்று இலையை அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு குளித்து வந்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
திருநீற்று பச்சிலை யார் பயன்படுத்த கூடாது:

கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திருநீற்று பச்சிலை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஒவ்வாமை உள்ளவர்கள்
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் திருநீற்று பச்சிலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |














