தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்..!

தொண்டை புற்றுநோய்

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் (Throat Cancer Symptoms) அதன் சிகிச்சை முறைகள் (Throat Cancer Treatment)..!

தொண்டை புற்று நோய் என்பது தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக்கூடிய புற்று நோய்களில் ஒன்று. இந்த புற்று நோய் தொண்டை பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள செல்களில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்படுகிறது. தொண்டை புற்று நோய் என்பது தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களை பொறுத்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

 

சரி இப்போது தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் (Throat Cancer Symptoms), தொண்டை புற்றுநோய் சிகிச்சை முறை, தொண்டை புற்று நோய் என்றால் என்ன? ஆகிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

தொண்டை புற்று நோய் அறிகுறிகள் (Throat Cancer Symptoms):-

தொண்டை புற்று நோய் அறிகுறிகள் என்பது, புற்று நோய் உள்ள இடத்தையும், அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை பொருத்தும் சார்ந்துள்ளது.

அவற்றில் சில தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

 1. குரல் மாற்றம் அதாவது பேச்சு தெளிவின்மை அல்லது பேசும் போது சிரமப்படுவது.
 2. நாள்பட்ட இருமல்.
 3. தொண்டை புண்.
 4. தொண்டை வலி.
 5. ஏதாவது விழுங்கும் போது சிரமப்படுவது.
 6. தொண்டையில் கட்டி.
 7. திடீர் எடை இழப்பு.
 8. கண்கள், தாடை மற்றும் தொண்டையில் ஏற்படும் வீக்கம்.
 9. காது வலி.
 10. காதில் ரீங்காரம் சத்தம் கேட்பது.
 11. தொண்டைக்குள் எதோ சிக்கியிருக்கும் ஒரு உணர்வு.

இந்த அனைத்து அறிகுறிகளும் சாதாரண தொண்டை தொற்று நோய்களுக்கான அறிகுறிகளுடன் நம்மை குழப்பக்கூடியது. இருப்பினும் தொண்டை புற்றுநோயானது நீண்டகால அறிகுறிகளை கொண்டிருக்கிறது.  இருப்பினும் இந்த புற்று நோய் முன்னேற்றமடையும் போது மட்டுமே தெரிய வருகிறது.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

மருத்துவர்களின் தொண்டை புற்றுநோய் சிகிச்சை (Throat Cancer Treatment):-

தொண்டை புற்றுநோய் சிகிச்சை (Throat Cancer Treatment) தொண்டை புற்றுநோய் உள்ள இடம், தொண்டை புற்று நோய் வகை மற்றும் தொண்டை புற்று நோயின் அளவு ஆகியவற்றை பொறுத்ததுதான் மருத்துவர்கள் தொண்டை புற்று நோயிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அந்த சிகிச்சை முறைகள் பின் வருமாறு இருக்கும்.

கதிர்வீச்சு சிகிச்சை:-

கதிரிவீச்சு சிகிசையானது குறிப்பிட்ட நோய் தாக்கப்பட்ட இடங்களில் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்க குறிப்பிட்ட அளவு காமா கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது.

கீமோ தெரபி:-

கீமோ தெரபியில் சில மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது, இது புற்று நோய் செல்களை நீக்க உதவுகிறது. தொண்டை புற்று நோய் சிகிச்சையில் கதிரியக்க சிகிச்சையுடன் இந்த கீமோதெரபி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை:-

அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டிகளை நீக்க முடியும். ஒரு கட்டியை நீக்குவதற்காக மற்ற திசுக்கள் அல்லது தைராய்டு பகுதிகளை அகற்ற வேண்டிய நிலை வரலாம். இருப்பினும் இது வளரும் கட்டியின் அளவை பொறுத்தது. அதேபோல் புற்று நோய் மேலும் பரவுவதை தடுக்க அயல் நிணநீர் சுரப்பிகளையும் நீக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

மல்டி மோடலிட்டி சிகிச்சைகள்:-

அறுவை சிகிச்சைக்கு பிறகு கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபியை பயன்படுத்துவதாகும். இந்த சிகிச்சை பொதுவாக பெரிய அளவிலான கட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மறுவாழ்வு சிகிச்சை:-

மறுவாழ்வு சிகிச்சை (Throat Cancer Treatment) புற்றுநோய் சிகிச்சையுடன் இணைத்து செய்யப்படுகிறது. இது உணவு பழக்கம், பேச்சு பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றம் அளிக்க உதவுகிறது.

அதாவது ஆலோசகர்கள், சமூகத் தொழிலாளர்கள், உளவியலாளர்கள் மூலம் தீவிரமாக சிகிச்சை பெரும் மனநல அழுத்தத்தில் உள்ள ஒருவரை மீட்டெடுக்க உதவ முடியும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்