துரியன் பழத்தின் நன்மைகள் | Thuriyan Palam Benefits in Tamil

Thuriyan Palam Benefits in Tamil

துரியன் பழம் நன்மைகள் | Durian Fruit Benefits in Tamil

Thuriyan Palam Benefits in Tamil:- துரியன் பழத்தினை குழந்தை வரம் தரும் அற்புத பழம் என்று சொல்வார்கள். இந்த துரியன் பழம் வெப்பமண்டலம் பகுதிகளில் வளரக்கூடிய பழமாகும். இந்தப் பழத்தில் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றம் அடித்தாலும், ஒரு சுளையைச் சாப்பிடத் தொடங்கியதும் முழுப் பழத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அந்த அளவிற்கு இந்த துரியன் பழம் மிகவும் சுவையாக இருக்கும். பார்ப்பதற்கு பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் கொண்டிருக்கும். இந்த துரியன் பழம் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழம் வகையாகும். அதிலும் இந்த துரியன் பழம் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சரி வாங்க இந்த பதிவில் துரியன் பழத்தின் நன்மைகள் மற்றும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

துரியன்  பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

இந்த துரியன் பழத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.  துரியன் பழம்  வைட்டமின் சி, வைட்டமின்  பி ஆகிய ஊட்டசத்துகளின் உறைவிடமாகும். இதில் வைட்டமின்  பி 6, தியாமின், ரைபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன. துரியன் பழம்  இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்களை மிதமான அளவில் உள்ளடக்கியுள்ளது.

துரியன் பழத்தின் நன்மைகள் – Thuriyan Palam Benefits in Tamil:

நகம்:

nail

உங்கள் கை கால் நகங்களில் ஏற்படும் நகம் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு துரியன் பழத்தின் வேர்களை அரைத்து பாதிக்கப்பட்ட நகங்கள் மீது  பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

காய்ச்சல் குணமாக:

பொதுவாக காய்ச்சல் அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைக்கு துரியன் மரத்தின் வேர் மற்றம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோயைத் தடுக்கிறது:

துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த இந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கதைத் தடுக்கிறது. ஆகவே புற்று வராமல் இருக்க துரியன் பழம் சாப்பிடலாம்.

தூக்கமின்மை சரியாக:

Insomnia

தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபான் (Tryptophan) என்ற அமினோ அமிலத்தை துரியன் பழம்பெற்றுள்ளது. ஆகவே தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்கள் துரியன் பழத்தை எடுத்துக்கொள்ளும் போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

துரியன் பழத்தில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது என்பதால் துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. ஆகவே நாம் இதனை உட்கொள்ளும் போது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலுக்கு வலிமை தருகிறது.

பப்பாளி பழம் நன்மைகள்

இரத்த சோகை குணமாக:

இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்த பலமாக பயன்படுகிறது. அதாவது இந்த துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

எலும்புகள் வலுப்பெற:

உடலில் எலும்புகள் வலுப்பெற அவசியம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது உடலில் கால்சியம் குறையும் போது பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆகவே இது போன்ற சமயங்களில், எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக அமைகிறது. துரியன் பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் வலுப்பெற உதவிபுரிகிறது.

விந்தணு குறைபாடு:

ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்சனைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த விந்தணு குறைபாடு, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் ஏற்படுகிறது. நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு ஏற்படும். ஆகவே ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

துரியனின் பக்க விளைவுகள் என்ன?

  1. கர்ப்பிணி பெண்கள் துரியன் பழத்தை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
  2. துரியன் பழத்தை அதிகமாக உட்கொள்வதினால் வயிற்று வலி ஏற்படக்கூடும்.
  3. துரியன் பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனைக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
  4. துரியனின் கட்டுப்பாடற்ற நுகர்வு உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பு:

துரியன் பழம் சாப்பிடும்போது தங்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொதுவான மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்