வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

துத்தி கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

Updated On: September 22, 2025 2:57 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

துத்தி இலையின் மருத்துவ பயன்கள்

இன்றைய பதிவில் துத்தி இலையின் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். இந்த செடி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் இருக்கும் வேர்கள் , விதைகள் மற்றும் இலை போன்றவை ஆயில்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது அதிகமாக ரோடுகளில் தெருவோரங்களில் காணப்படும். இதன் மருத்துவ பெயர் abutilon indicum என அழைக்கப்படுகிறது. துத்தி இலை தலைவலி , உடல் உஷ்ணம்,ஆறாத புண், மூலம், ஆண்மை குறைவு ,வெள்ளைப்படுதல், உடல்வலி போன்றவற்றை  சரிசெய்வதற்கும் . இப்போது நாம் துத்தி இலையின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

துத்தி இலையின் நன்மைகள்:

பல்வலி:

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு வாய் கொப்பிளித்து வந்தால் பல் வலி மற்றும் பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும். 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதன் மூலம் பல்வலி பிரச்சனையை சரிசெய்கிறது.

உடல்வலி :

உடல் வலி மற்றும்  வீக்கம் இருப்பவர்கள்  துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் உடல் வலி  பிரச்சனை விரைவில் குணமாகும். 

காய்ச்சல்

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது உடலில் உள்ள கெட்ட நீர் உடலை கனமாக வைத்திருக்கும். இதன் இலையை பறித்து சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால். உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி உடம்பை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

வெள்ளைப்படுதல்:

கோடை காலத்தில் வயிற்று வலி, சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் மற்றும் சூட்டினால் ஏற்படும் வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு தினமும் குடித்து வந்தால் வெள்ளை படுத்தல் பிரச்சனை குணமாகும்.

சரும புண் :

உடம்பில் இருக்கும் புண், தீ காயம் ஆகியவற்றை போக்குவதற்கு துத்தி இலையை அரைத்து உடம்பில் தடவி வருவதன் மூலம் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை குணமாகும்.

ஆண்மை குறைவு:

துத்தி இலைக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்யும். ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் துத்தி பூவை எடுத்துக்கொள்வதன் மூலம் விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

மூலம் நோய்க்கு :

மூலம் பிரச்சனை இருப்பவர்கள் துத்தி கீரையை எடுத்து பாசி பருப்பு போட்டு, நல்லெண்ணெயில் கூட்டு செய்து வருவதன் மூலம் மூல நோய் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

சிறுநீர் கோளாறு:

துத்தி இலை சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் வெளியேறும் போது அதிக மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் துத்தி இலைபாசி பயிறு சேர்த்து  நெய் சேர்த்து  தாளித்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனையை சரிசெய்யும்.

முகப்பரு,கரும்புள்ளிகள்: 

உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் அதனை கரும்புள்ளிகள் ஏற்படாமல் நீக்கிவிடும். முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் துத்தி இலை மற்றும் வசம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு வராமல் தடுக்கலாம். 

கருவுற்றல் :

குழைந்தை கருவுற்றலுக்கு இந்த இலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலையின் சாறை தினமும் குடித்து வந்தால் பாக்கியம் கிடைக்கும். துத்தி கீரையுடன் சீரகம்  சேர்த்து பொரியல் செய்து  தினமும் சாப்பிட்டு வந்தால் வந்தால் கருமுட்டை அதிகம் உற்பத்தியாகி குழந்தை பாக்கியத்தை உண்டாக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்


இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now