தைராய்டு அறிகுறிகள் என்னென்ன? Thyroid symptoms in tamil..!

Thyroid symptoms in tamil

 தைராய்டு அறிகுறிகள்..! Hypothyroidism symptoms in tamil..!

Thyroid symptoms in tamil:- தைராய்டு என்பது முன் கழுத்து மேல் பகுதியில் வண்ணத்து பூச்சி போல் ஒரு சுரப்பி இருக்கும் அதுதான் தைராய்டு சுரப்பி என்று சொல்வார்கள். இந்த தைராய்டு சுரப்பி நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது. அது மட்டுமின்றி நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்துவதும், இயக்கத்தை தூண்டக்கூடியதும் இந்த தைராய்டு சுரப்பி தான். இந்த தைராய்டு சுரப்பி பெருபாலும் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதிகப்படியான மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, அயோடின் பற்றாக்குறை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் சிலவகையான பாதிப்புகள் மற்றும் மரபு ரீதியான காரணங்களினால் இந்த தைராய்டு சுரப்பி பெரும்பாலும் பாதிப்படைகின்றது. இந்த தைராய்டு பிரச்சனையை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று ஹைப்போ தைராய்டு, மற்றொன்று ஹைபர் தைராய்டு.

newஉடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

 

சரி இந்த பதிவில் ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டு பிரச்சனைகளுக்கான  அறிகுறிகளை (Thyroid symptoms in tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஹைபோ தைராய்டு அறிகுறிகள் / Thyroid symptoms in tamil:-

தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவாக இருந்தால் இவற்றை மருத்துவர்கள் ஹைபோ தைராய்டு என்பார்கள். ஒருவருக்கு ஹைபோ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

1 ஒருவருக்கு ஹைபோ தைராய்டு இருக்கின்றது என்றால் அவர்களுக்கு உடல் எடை அதிக பருமனாக இருக்கும். என்னதான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது.

சாதாரணமாக ஒருவருக்கு இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்க வேண்டும். ஆனால் இந்த ஹைபோ தைராய்டு இருப்பவர்களுக்கு இதய துடிப்பானது குறைவாக இருக்கும்.

3 ஹைபோ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக சோர்வு, வேலை செய்வதில் அதிக ஆர்வமின்மை போன்றவைகளாக இருக்கும்.

4 முறையற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும்.

இந்த தைராய்டு பிரச்சனையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகின்றன. பொதுவாக பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வந்துவிட்டது என்றால் அவர்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.

6 அதேபோல் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அதாவது மலம் கெட்டியாக இறுக்கி வெளியேறுவது, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது போன்ற பிரச்சனை இருக்கும்.

7 தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக குளிர் உணர்வாக இருக்கும் என்பதால் இவர்களுடைய உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை இரண்டும் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் சரும தோள்கள் வறண்டு காணப்படும்.

8 அதேபோல் இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாலுணர்வுகளில் அதிகநாட்டம் இருக்காது.

9 எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள், அதிக ஞயாபக மறதியாக இருக்கும், கன்னங்கள் இரன்டும் உப்பி காணப்படும், மேலும் இவர்களுக்கு கழுத்து பகுதியில் அதிகம் சதை தொங்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு ஹைபோ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தவிர இரத்தத்தில் T3, T4 என்று சொல்லக்கூடிய தைராய்டு ஹார்மோன்கள் குறைவாகவும், TSH என்று சொல்லக்கூடிய Thyroid -stimulating hormone அதிகமாக இருக்கும்.

எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?

ஹைபர் தைராய்டு அறிகுறிகள் / Thyroid symptoms in tamil:-

தைராய்டு சுரப்பிகளில் இருந்து சுரக்கக்கூடிய ஹேராய்டு ஹார்மோன்களின் அளவு அளவுக்கு அதிகமாக சுரந்தால் அவற்றை ஹைபர் தைராய்டு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவருக்கு ஹைபர் தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி இப்பொழுது நாம் தெரிந்துகொள்ளலாம்.

1 ஒருவருக்கு ஹைபர் தைராய்டு இருக்கிறது என்றால் அவர்களது உடல் எடை மிகவும் மெலிந்து காணப்படும். இவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்களால் உடல் எடையை அதிகரிக்க முடியாது.

2 இவர்களுக்கு இதய துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

3 ஹைபர் தைராய்டு ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்களுக்கு அதிகளவு பயம், பதற்றம், கை நடுக்கம் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும். அதேபோல் அதிகப்படியாக இவர்கள் கோபம்படுவார்கள்.

4 மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அதாவது இவர்களுக்கு மாதவிடாய் தள்ளி வருவது அல்லது வராமலே இருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கும்.

5 ஒருவருக்கு ஹைபர் தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் அடிக்கடி நிறுநீர் மற்றும் மலம் கழித்து கொண்டே இருப்பார்கள். மேலும் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை, உடல் எப்பொழுது அதிக வெப்பமாக இருப்பது போன்ற பாதிப்புகள் இருக்கும்.

6 சாப்பிட்ட பின்பும் அதிக பசி உணர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் அனைத்த்தும் ஒருவருக்கு ஹைபர் தைராய்டு பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

7 அதேபோல் இவர்களுக்கு TSH என்று சொல்லக்கூடிய Thyroid-stimulating hormone குறைவாகவும், T3, T4 என்று சொல்லக்கூடிய தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவும் காணப்படும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு வகையான தைராய்டு பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் தங்களுக்கு இருந்தால் உடனே இதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளுங்கள்.

இந்த தைராய்டு பிரச்னையை நாம் முறையான உணவு மற்றும் சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம் நன்றி வணக்கம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்