10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா..? அப்போ தேங்காய் பாலுடன் இந்த 2 பொருளை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்..!

Advertisement

Tips to Gain Weight at home in Tamil

பொதுவாக ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். நான் நல்ல சத்துள்ள உணவுகளை தான் சாப்பிடுகிறேன் ஆனாலும் எனது உடல் எடை அதிகரிக்கவே இல்லை என்று. இப்படிப்பட்ட கவலை உங்களின் மனதில் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினம் ஒரு பயனுள்ள ஆரோக்கிய தகவலை அறிந்துக் கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் 10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க உதவும் குறிப்பினை பற்றி தான் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உடல் எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Weight Gain Tips in Tamil:

Weight Gain Tips in Tamil

10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் பால் – 1 டம்ளர் 
  2. நாட்டு சர்க்கரை – 1 டீஸ்பூன் 
  3. எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்  
  4. செவ்வாழை பழம் – 2

எள்ளினை வறுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எள்ளினை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் உணவுகள்

தேங்காய் பாலை எடுத்து  கொள்ளவும்:

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து அதில் 1 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடியுங்கள்.

இதனை குடித்த 5 நிமிடங்கள் கழித்து நாம் எடுத்து வைத்துள்ள 2 செவ்வாழை பழங்களையும் சாப்பிடுங்கள். இதனை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் உடல் எடை 10 நாட்களிலேயே அதிகரிக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒல்லியா இருக்கிங்களா ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips

 

Advertisement