Tips to Stay Young Forever in Tamil
பொதுவாக அனைவருக்குமே என்றுமே நாம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு நாம் முதலில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி நீங்களும் நன்கு ஆரோக்கியத்துடன் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா.? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் ஆரோக்கியத்துடன் என்றும் இளமையாக இருக்க உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி என்றும் இளமையாக இருங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 என்றும் இளமையாக இருக்க இதை மட்டும் Follow பண்ணுங்க நண்பர்களே
How to Stay Young Forever Naturally in Tamil:
ஆரோக்கியத்துடன் என்றும் இளமையாக இருக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.
- கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- ஓமம் – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்
அடுப்பில் கடாயை வைக்கவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், 2 டேபிள் ஸ்பூன் ஓமம் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்களின் முகம் என்றும் இளமையாக காட்சி அளிக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
பொடியாக அரைக்கவும்:
பின்னர் அதனை நன்கு குளிர்வியுங்கள். பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சலித்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தண்ணீரை சூடுபடுத்தி கொள்ளவும்:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடனே நாம் தயார் செய்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
இப்பொழுது அதனை வடிக்கட்டி குடியுங்கள். இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றுடன் குடித்து வருவதன் மூலம் உங்களின் உடல் என்றும் ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருப்பதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே இதை Follow பண்ணி பாருங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |