வாய்ப்புண் எதனால் வருகிறது..? வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

Advertisement

வாய்ப்புண் எதனால் வருகிறது..? | Treatment of Mouth Sores at Home in Tamil

இக்காலத்தில் உள்ள அனைவருக்கும் உடலில் பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளில் வாய்ப்புண் அதிகமாகவே வருகிறது. அதிலும் இப்பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே வருகிறது. இந்த வாய்ப்புண் உதடு, நாக்குகளில் ஏற்படுகிறது. இதனால் ஒழுங்காக சாப்பிட முடியாமல், பேச முடியாமல் போகிறது. இதனால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இந்த வாய்ப்புண் எதனால் வருகிறது..? அதை தடுக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்..? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

வாய்ப்புண் வர காரணம்:

 நம் உடலில் பித்தம் அதிகரித்தால் வாய்ப்புண் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜீரண கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் C போன்ற காரணங்களினாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது. 

வாய்ப்புண் குணமாக இயற்கை வைத்தியம்

வாய்ப்புண் வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் உங்களுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த வாய்ப்புண் வந்தால் 7 லிருந்து 10 நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். அப்படி சரியாகாமல் நீண்ட நாட்களுக்கு இருந்தால் புற்று நோயாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம்..!

வாய்ப்புண் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டிடும்:

முதலில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டு கட்டாயமாக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

permanent solution for mouth ulcers in tamil

இளநீர், பழங்கள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.

நமது உடலில் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் வரமால் இருக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.

தொண்டை புண் குணமாக இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

நம் உடலில் மலச்சிக்கல், ஜீரண கோளாறு போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் நம் வாய் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

how to cure mouth ulcers fast naturally in tamil

வாய்ப்புண் உள்ளவர்கள் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணும் சரியாகிவிடும்.

வாயில் புண் உள்ள இடத்தில், சிறிதளவு வெண்ணெய் அல்லது தேனை தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும்.

how to cure mouth ulcers fast in tamil

தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.

மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.

பச்சரிசியுடன் சிறிதளவு பாசிப்பயிறு, வெந்தயம், பூண்டு சேர்த்து வேக வைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

மணத்தக்காளி கீரை மற்றும் அகத்திக்கீரையுடன் தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

புதினா இலையை அரைத்து அதிலுள்ள சாற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

 

Advertisement