1 ஸ்பூன் சாப்பிடுங்க..! பல நோய் காணாமல் போகும்..!

Uses Of Triphala Powder

திரிபலா பொடி பயன்கள்..! Triphala Powder Uses..! 

Uses Of Triphala Powder: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடலை எந்த வித நோயும் அண்டவிடாமல் பாதுகாக்கும் திரிபலா பொடியின் பயன்களை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த திரிபலா பொடியானது கடுக்காய், நெல்லி, தான்றிக்காய் போன்ற மூலிகை பொருளால் செய்யப்பட்டவை. திரிபலா பொடி அனைத்து நாட்டு மருத்துவ கடைகளிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றது. இந்த பொடியினை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய ஒன்று. மூலிகை பொருளால் ஆன திரிபலா பொடியை எப்படி சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிடலாம், இந்த பொடி சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன்கள் அடங்கியிருக்கு, யார் சாப்பிட கூடாது என்ற முழு விவரங்களையும் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

new1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்..! கால்சியம் குறைபாடே இருக்காது..! White Sesame Seeds Benefits..!

திரிபலா பொடி சாப்பிடும் முறை 1:

Uses Of Triphala Powderமுதலில் ஒரு கிளாசில் 1 ஸ்பூன் அளவிற்கு திரிபலா பொடியை எடுத்துக்கொள்ளவும். அடுத்து பொடியுடன் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு சுவையாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தேன் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும். இப்போது இவற்றை குடித்து வரலாம்.

திரிபலா பொடி சாப்பிடும் முறை 2:

Uses Of Triphala Powderஒரு பிளேட்டில் 1 ஸ்பூன் திரிபலா பொடியை எடுத்துக்கொள்ளவும். அதோடு தேன் 1 ஸ்பூன் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து சாப்பிட்டு வரலாம்.

என்றும் இளமையுடன் இருக்க:

Uses Of Triphala Powderஎப்போதும் உடலை இளமையாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் தினமும் திரிபலா பொடியை சாப்பிட்டு வரலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

uses of triphala powderசிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் உடல் சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும். இது போன்று உள்ளவர்கள் திரிபலா பொடியினை தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

செரிமான கோளாறுகள் நீங்க:

uses of triphala powderபெரும்பாலானோருக்கு சாப்பிட்ட உணவானது செரிக்காமல் உடலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். இவற்றை குணப்படுத்த திரிபலா பொடியை சாப்பிடலாம். இந்த பொடியானது உணவு பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு:

uses of triphala powderமலசிக்கல் உள்ளவர்கள் இந்த திரிபலா பொடியை அவசியம் சாப்பிட்டு வரலாம். குழந்தைகள் கடைகளில் விற்கக்கூடிய இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் போன்றவை வந்து உடல்நிலையை கெடுத்துவிடும்.

அதனால் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை திரிபலா பொடியினை நீரில் கலந்து கொடுத்துவர மலசிக்கல், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

அல்சர் நோயிலிருந்து விடுபட:

uses of triphala powderசிலர் உணவினை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதனால் இந்த அல்சர் நோயானது பெரிய விளைவில் கொண்டுபோய் விடுவதற்கு வாய்ப்புள்ளது. அல்சர் நோய் குணமாகுவதற்கு திரிபலா பொடியினை சாப்பிட்டு வர வயிற்று புண் விரைவில் நீங்கும்.

இரத்த சோகை / சர்க்கரை நோய் குணமாக:

uses of triphala powderஇரத்த சோகை உள்ளவர்கள் தினமும் திரிபலா பொடியை சாப்பிட்டு வர  இரத்த சோகை குறைந்து உடலில் இரத்தம் அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் திரிபலா பொடியை தேனில் கலந்து சாப்பிட கூடாது. உடலில் குளுக்கோஸ் அளவினை சமநிலையாக வைத்திருக்கும் இந்த திரிபலா பொடி. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட்டு வரலாம்.

newநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Immunity boosting foods..!

உடல் கொழுப்பை குறைக்க திரிபலா பொடி:

uses of triphala powderஉடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதற்கு தினமும் திரிபலா பொடி சாப்பிட்டுவர உடல் கொழுப்புகள் நீங்கி உடல் தோற்றமானது அழகாக காட்சியளிக்கும்.

உடல் எடை குறைய:

uses of triphala powderஉடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சிலர் உணவின் அளவை குறைத்துக்கொள்வார்கள். உணவின் அளவினை குறைப்பதற்கு தினமும் திரிபலா பொடியை சாப்பிட்டு வர தேவையற்ற கொழுப்புகளை கரைத்து  எடையை குறைத்து உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும்.

அரிப்பு போன்ற நோய் நீங்க:

uses of triphala powder

பலருக்கு உடலில் எப்போதும் அரிப்பு, சரும நோய், தடிப்புகள் போன்றவை இருந்துகொண்டே இருக்கும். சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் திரிபலா பொடியை சாப்பிட்டு வர இதுபோன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்.

சளி /ஆஸ்துமா நோய் விரைவில் குணமாக:

uses of triphala powderசளி, ஆஸ்துமா நோய் உள்ளவர்களால் சரியாக மூச்சு விட முடியாததால் மிகவும் சிரமப்படுவார்கள். இதற்கு மூலிகையால் செய்யப்பட்ட திரிபலா பொடியை சாப்பிட்டு வருவதால் சுவாச பாதைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுவாசம் மேம்பட செய்யும்.

தலை வலி குணமாக:

uses of triphala powderசிலருக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடம்பு வளர்ச்சிதை காரணமாக விடாது தலைவலி இருந்துகொண்டே இருக்கும். தொடர் தலைவலி உள்ளவர்கள் திரிபலா பொடியை சாப்பிட்டு வர தலை வலி குணமாகும்.

புற்றுநோயை குணப்படுத்தும் திரிபலா பொடி:

uses of triphala powderபுற்றுநோயை குணப்படுத்தும் சக்தி திரிபலா பொடிக்கு நிறையவே உள்ளது. புற்றுநோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த பொடியினை எடுத்துக்கொண்டால் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

திரிபலா பொடியை எப்போது சாப்பிட வேண்டும்:

uses of triphala powderமழை காலத்தில் திரிபலா பொடியை வெண்ணீரில் கலந்து குடித்துவர வேண்டும். கோடை காலத்தில் சாதாரண நீரில் பருகலாம்.

மழை காலங்களில் திரிபலா பொடியில் சிறிதளவு நெய் அல்லது தேன் சேர்த்து சாப்பிடுவரலாம்.

எப்போது சாப்பிடலாம்:

திரிபலா பொடியாகவும் மற்றும் மாத்திரை வடிவிலாகவும் கிடைக்கின்றது. இந்த பொடியை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

காலையில் சாப்பிட முடியாதவர்கள் இரவு படுக்கைக்கு முன்பு சாப்பிடலாம்.

சாப்பிடும் அளவு முறை:

குழந்தைக்கு திரிபலா சூரணமாக இருந்தால் அரை கிராம் அளவிற்கும், மாத்திரையாக இருந்தால் 1 கொடுக்கலாம்.

பெரியவர்கள் சூரணமாக இருந்தால் 1 ஸ்பூன் அளவும், மாத்திரையாக இருந்தால் 2 எடுத்துக்கொள்ளலாம்.

திரிபலா பொடி சாப்பிடக்கூடாதவர்கள்:

மிகவும் உடல் மெலிந்தவர்கள், வயிற்று போக்கால் அவதிப்பட்டவர்கள், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடுவதை தவிர்த்து கொள்வது நல்லது.

newஎந்த நோய்க்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil