வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தெரியுமா.?

Updated On: April 18, 2025 3:51 PM
Follow Us:
Siruthaniyam Health Benefits in Tamil
---Advertisement---
Advertisement

சிறுதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள் | சிறுதானியங்கள் எத்தனை வகை

இன்றைய பதிவில் சிறுதானியத்தின் வகைகள் அதன் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம். நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், அழுத்தமாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கீர்களா.! அந்த காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் சத்தான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய அவசர கால கட்டத்தில் இருப்பதால் பாஸ்ட் புட் தேடி செல்கிறோம் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு  என்ன சாப்பிட வேண்டும் என்று யோசிப்பதில்லை. நம் தாத்தா, பாட்டி மாதிரி எல்லாம் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால் ஒரு வகை தானியமாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள். தானியத்தின் வகைகளும் அதன் நன்மைகளும் படித்து தெரிந்து கொள்ளுவோம்.

பாரம்பரிய நெல் வகைகள் பெயர்கள்

சிறுதானிய வகைகள் பெயர்கள்  | Siruthaniyam Benefits in Tamil

Siruthaniyam Health Benefits in Tamil

இன்றைய கால கட்டத்தில் சிறு தானியம் என்றாலே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஏனென்றால் உணவில் அதிகம் சேர்ப்பதில்லை. சுவையாகவும், சீக்கிரமாகவும் உணவு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நாம் செய்வது ஆரோக்கியமானதா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சிறு தானியத்தில் பல நன்மைகள் இருக்கிறது. அதாவது தானியத்தில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து, போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

  • வரகு 
  • சாமை 
  • தினை 
  • குதிரைவாலி 
  • கம்பு 
  • கேழ்வரகு 
  • சோளம்

வரகு:

Siruthaniyam Health Benefits in Tamil

நம் உடலுக்கு அதிக வலிமையை தருவது வரகு. வரகில் நார்சத்து அதிகமாக உள்ளது. வரகு தானியத்தை சாப்பிட்டால் சில நோய்கள் தீரும் அது என்னென்ன என்பது தெரியுமா.?

  • மலச்சிக்கல் 
  • உடல் பருமன் குறையும் 
  • சர்க்கரை அளவு 
  • உயர் இரத்த அழுத்தம்

இவை அனைத்தையும் சீராக செயல்படுத்த வரகு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களும் வரகை சாப்பிட்டால் மாதவிடாய் சரியாகிவிடும்.

சாமை: 

Siruthaniyam Health Benefits in Tamil

சாமை சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது. இரத்த சோகையை சரி செய்யும். மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும்.

சாமையில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவுகளின் அடித்தளமாகும்.

தினை:

Siruthaniyam Health Benefits in Tamil

தினையில் புரத சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் இதயத்தை ஆரோக்கியமாகவும், கண்கள் சிறப்பாக தெரிவதற்கு வழி வகுக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதுவுகிறது. எப்படியென்றால் தாய்ப்பால் சுரப்பதற்கு வழி செய்கிறது. வாயு பிரச்சனையிலுருந்து விடுவிக்கிறது.

திணையில் அதிகளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம்.

இருப்பினும் தினையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்.

எனவே சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்.

திணையில் கூழ்  செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்.  தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும். தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும். தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.

குதிரைவாலி:

Siruthaniyam Health Benefits in Tamil

குதிரை வாலியில் இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் புற்று நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். இடுப்பு வலி, வயிற்று வலி வரும் நேரங்களில் குதிரைவாலியை சாப்பிடுவது வலியை குறைக்க செய்யும்.

குதிரைவாலி சாதத்தில் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றுக்குள் நன்மை தரக்கூடிய lactobacillus என்ற பாக்டீரியாக்களை தருகிறது. மேலும் குதிரைவாலி மோர் சோறு, அல்சரை குணப்படுத்தும். தினமும் குதிரைவாலி சோறு உட்கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.

காய்ச்சல் இருக்கும்போது குதிரைவாலியை கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும்.

வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு குதிரைவாலி மிகவும் உதவுகிறது.

கம்பு: 

Siruthaniyam Health Benefits in Tamil

கம்பு தானியத்தில் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் உடல் வெப்பத்தை குறைக்கும். நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயிற்று புண் வராமல் தடுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கம்மங்கூலில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால் வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல் மற்றும் மூலம் ஆகிய பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றது.

அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.

கேழ்வரகு:

Siruthaniyam Health Benefits in Tamil

கேழ்வரகில் இரும்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. எலும்பு தேய்மானம், இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக கேழ்வரகு  இருக்கும்.

உடலை உறுதிப்படுத்தவும், பித்தத்தை தணிக்கவும், வாதத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

உடல் உழைப்பு இல்லாதவர்கள் கேழ்வரகு உட்கொண்டால் ஜீரணமாகாது. அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை குறைந்தளவு அல்லது தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம்.

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.

கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.

சோளம்:

Siruthaniyam Health Benefits in Tamil

சோளத்தில் புரத சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோய், செரிமான கோளாறு, இரத்த சோகை பிரச்சனையில் உள்ளவர்களுக்கு சோளம் சிறந்த மருந்தாக இருக்கும். மற்றும் உடலில் உள்ள உப்பின் அளவை சீராக வைக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சோளம் சிறந்த மருந்தாக இருக்கும்.

சிறு தானியத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்று படித்து தெரிந்து கொண்டீர்களா.! இனி வரும் நாட்களிலாவது சிறு தானியங்களை சேர்த்து உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now