உடல் எடை குறைய எளிய வழிகள்..! Weight Loss Tips In Tamil..!
Diet Plan For Weight Loss In Tamil / Udal edai kuraiya tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் எதிர்பார்க்கும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். சிலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் மூச்சு பிரச்சனை, அதிகமாக எந்த வேலைகளும் செய்ய முடியாது. உடல் எடை கூடுவதனால் டயட் என்ற பெயரில் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் கூட உடலில் பின் விளைவுகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடையினை எளிமையான முறையில் குறைக்கலாம். இயற்கையாக உடல் எடையை குறைத்து நம் உடலை எப்படி ஸ்லிம் பாடியாக வைத்துக்கொள்ளலாம் என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
![]() |
உடல் எடை குறைய எளிய வழிகள்..!
உடல் எடையை குறைக்க சோம்பு தண்ணீர்:
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சோம்பு கலந்த நீரை அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சோம்பு நீரானது நீக்கி உடலை ஸ்லிம் பாடியாக மாற்றும்.
உடல் எடையினை குறைக்கும் அமுக்கிரா வேர்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய நீரை தினமும் 1 டம்ளர் அளவிற்கு பருகி வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்துவிடும்.
உடலை ஸ்லிம்மாக வைக்கும் சுரைக்காய்:
உடல் எடை உள்ளவர்கள் சுரைக்காயை வாரம் ஒருமுறை எடுத்துக்கொண்டால் உடல் எடையானது குறையும். ஏனென்றால் வயிற்றில் உள்ள வீண் கொழுப்புகளை கரைக்கும் சக்தி சுரைக்காய்க்கு உள்ளது.
உடல் எடையை குறைக்கும் பப்பாளி:
பப்பாளி காயினை சமைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து உடலை அழகாக வைத்திருக்கும்.
உடல் எடை குறைய யோகாசனம்..! Yoga For Weight Loss..! |
உடல் எடை குறைய எலுமிச்சை சாறு:
தினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வர உடல் எடை விரைவில் மாற்றம் அடையும்.
உடல் எடை குறைக்க உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ளுதல்:
சிலர் உணவில் வெங்காயம், பூண்டு என்றாலே ஒதுக்கி வைத்துவிடுவார்கள். வெங்காயம், பூண்டுவினை நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதால் உடல் எடையானது குறைய வாய்ப்புள்ளது.
![]() |
உடல் எடை குறைய அருகம்புல் ஜூஸ்:
அருகம்புல் ஜுஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வர உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் விரைவில் தெரியும்.
உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும் மந்தாரை வேர்:
மந்தாரை வேரை எடுத்து 1 கப் நீரில் நன்றாக காய்ச்சி, நீரானது பாதியாக வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இந்த நீரை வடிகட்டிய பிறகு தினமும் குடித்து வர உடல் எடை மெலிவடையும்.
உடல் எடை குறைக்கும் வாழைத்தண்டு ஜூஸ்:
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜுஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சனை தடுக்கப்படும். அதோடு தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைந்து காணப்படும்.
நடைப்பயிற்சி மூலம் உடல் எடை குறையும்:
தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உடற்பயிற்சியினால் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். குறிப்பாக தினமும் நடைப்பயிற்சியை பின்பற்றினாலே உடல் எடை குறைந்து விடும்.
உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு தேநீர்:
முதலில் கொள்ளுவை வறுத்து பொடியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து கொடம்புளி 2 துண்டுகள் ஊறவைக்கவும். அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
இந்த நீரானது கொதித்த பிறகு அவற்றை வடிகட்டி காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவிற்கு குடித்து வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.
குறிப்பு: இந்த கொள்ளு நீரை குடிக்கும்போது அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க உணவிற்கு பின் மோர் எடுத்துக்கொள்வது நல்லது.
உடல் எடையை குறைக்க வைக்கும் கல்யாண முருங்கை இலை:
Udal Edai Kuraiya: உடல் எடையை குறைக்க 4 கல்யாண முருங்கை இலையினை துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 10 மிளகினை சேர்த்து தட்டி போடவும். இவற்றை 1 டம்ளர் அளவு நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்த பிறகு நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவு எடுத்து குடித்துவர வேண்டும். இவற்றை அடிக்கடி குடித்து வர நாளடைவில் உடல் கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறைந்து விடும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி உடலை அழகாக வைத்துக்கொள்ளலாம்.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |