வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடல் எடையை குறைப்பதில் முட்டையின் பங்கு என்ன தெரியுமா?

Updated On: November 20, 2025 2:42 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

உடல் எடையை குறைக்க முட்டையின் பங்கு 

இன்றைய பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கோழி முட்டையின் நன்மைகள் பற்றி பார்க்க போகின்றோம். நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் முட்டையும் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. நாம் பிரியாணியுடன் முட்டையும் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. கோழி முட்டையில் அதிக ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. கோழி முட்டையின் விலை எப்போதுமே அதிகமாகவே இருக்கும்.அதற்கு காரணம் அதில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

மேலும், கோழி முட்டையில் அதிகம் புரதம், கால்சியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் , ஒமேகா 3, வைட்டமின் டி ,கோலின், லூடின் மற்றும் செலினியம் பாஸ்பரஸ் போன்றவரை கொண்டுள்ளன மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும், கண்பார்வையை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இயற்கை முறையில் உருவாகும் கோழி முட்டை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யாது. கோழி முட்டைகள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க…

உடல் பருமன் குறைப்பதற்கு:

  • உடல் எடையை குறைக்க முட்டையை சாப்பிடும்போது. அதனுடன் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் சேர்த்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உணவை சராசரி விகிதத்தில் இருக்க உதவும்.
  • முட்டையை தனியாக சாப்பிடுவதை விட சாலட் ,சாண்விட்ச் அல்லது சூப் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உங்கள் உணவுக்கு கூடுதல் புரதத்தை சேர்க்கும்  
  • அந்த வகையில் சரியான முறையில் எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்க முட்டை முக்கிய பங்கு வகிக்கும்.
  • முட்டையில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ஆற்றலை அதிகரித்து ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
  • உடல் எடை குறைப்புக்கு ஒரு நாளைக்கு தினசரி ஒன்று அல்லது இரண்டு முட்டை  போதுமானதாக இருக்கும். 
  • கோழி முட்டையில் சுமார் 147 மில்லிகிராம் கோலின் ஊட்டச்சத்து இருப்பதால் இது கல்லீரல் ஆரோக்கியம் மாற்றும் நரம்பு வளர்ச்சியை மேம்படுத்த செய்கிறது.
  • ஒரு கோழி முட்டையில் சராசரியாக 70-80 சதவீதம் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை  பராமரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வாரம் 3 முறை கோழி முட்டையை வேக வைத்தோ அல்லது பச்சை முட்டையாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டு கோழி முட்டை சாப்பிடுவதால் ஏற்படும்  நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now