இதை மூன்று நாள் தொடர்ந்து குடித்தால் அல்சர் முழுமையாக குணமாகிவிடும்..!

Ulcer Stomach Pain Home Remedy Tamil

அல்சர் குணமாக வீட்டு மருத்துவம் | Ulcer Stomach Pain Home Remedy Tamil

இன்றளவில் அதிகமானோருக்கு இருக்கின்ற ஒரு பெரும் பிரச்சனை தான் அல்சர்.. இதனை குணம் படுத்த மறுவர்களிடம் தான் செல்ல வேண்டும் என்கின்ற எந்த ஒரு அவசியமும் இல்லை.. வீட்டில் இருந்தபடி மிகவும் எளிமையான முறையில் குணம்படுத்திவிட முடியும்.. இருப்பினும் உங்கள் உணவு முறையை சரியாக மேற்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். உடலுக்கு தீங்குவிளைவிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. உணவில் காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.. இதனுடன் இங்கு நம் பதிவில் கூறியுள்ள பணத்தை தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் மட்டும் செய்து குடித்தால் போதும். அல்சர் முழுமையாக குணமாகிவிடும். சரி வாங்க அந்த பணம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் | Ulcer Treatment at Home in Tamil

தேவையான பொருட்கள்:

  • முட்டைகோஸ் – பொடிதாக நறுக்கியது ஒரு கைப்பிடியளவு
  • தண்ணீர் – 1/2 டம்ளர்
  • தேன் – தேவையான அளவு

செய்முறை:

பொடிதாக நறுக்கிய முட்டைகோஸை ஒரு மிக்ஸி ஜாரிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். பின் அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பிறகு அரைத்த முட்டைகோஸை நன்றாக வடிகட்டி சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

பின் அதில் தேவையான ளவு தேன் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.

அவ்வளவு தான் பானம் தயார்.

அருந்தும் முறை:

தொடர்ந்து மூன்று நாட்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இந்த பானத்தை தயார் செய்து அருந்த வேண்டும். இப்படி அருந்துவதினால் அல்சர் முன்னரே நாளில் குணமாகிவிடும்.

பயன்கள்:

முட்டைகோஸில் வைட்டமின் U சத்து அதிகம் உள்ளது. மேலும் L Glutamine என்கின்ற அமினோ அமிலமும் உள்ளது. குறிப்பாக இவற்றில் உள்ள Gefarnate என்கின்ற அமிலம் நமது வயிற்று பகுதியில் உள்ள சவ்வு படலத்தை மீண்டும் வளர செய்ய உதவுகிறது. வயிற்று பூண் மட்டும் இல்லாமல் கல்லீரலையும் சேர்த்து இந்த பானம் குணப்படுத்திக்கிறது. ஆக அல்சர் பிரச்சனை ஆரம்ப நிலையாக இருந்தால் இந்த பானத்தை ஒருநாள் தயார் செய்து குடித்தால் போதும்.. அதுவே முத்தியை நிலையாக இருந்தால் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் தயார் செய்து அருந்தினால் போதும் அல்சர் குணமாகிவிடும்.

இதையும் கிளிக் செய்யது படியுங்கள் 👇
அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்..!

இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips