Unhealthy Chicken Part
உலகில் பெரும்பாலனவர்கள் விரும்பி சாப்பிட கூடிய உணவு என்றால் அசைவ உணவு தான். அசைவ உணவுகளை விதம் விதமாக செய்து சாப்பிடுவீர்கள். இந்த மாதிரியான அசைவ உணவுகளில் விரும்பி சாப்பிட உணவு என்றால் சிக்கன் உணவு தான். இந்த சிக்கன் ஆனது உடலிற்கு கெடுதலான ஒன்று தான். இதை அறிந்து தான் அனைவரும் உட்கொள்கிறோம். ஆனாலும் சிக்கனில் சில பாகங்களை சாப்பிட கூடாது என்று இருக்கிறது. அவை என்னென்ன பாகங்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கோலம் வாங்க..
கழுத்து பகுதி:
சிக்கன் கழுத்து பகுதியை சூப் மற்றும் குழம்புகளில் பயன்படுத்தபடுகிறது. இந்த பகுதி ஆனது இனப்பெருக்கம் செய்வதற்கான முக்கிய இடமாக இருக்கிறது. இதனுடைய கிருமிகளை கொதிக்க வைப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. கழுத்து பகுதியை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்கவேண்டும். இல்லயென்றால் அதனை சுத்தம் செய்வதற்கென்று நேரம் ஒதுக்கி நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
இதயம் பகுதி:

சிக்கனில் இதயம் ஆனது புரதம் மற்றும் அத்திவாசியமான தாதுக்களை கொண்டுள்ளது. எவ்வளவு தான் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதனை அதிகமாக எடுத்து கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் இதனை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நுரையீரல் பகுதி:
சிக்கனின் நுரையீரலில் வெப்பநிலையை எதிர்க்க கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் ஒற்றுண்ணிகளை கொண்டுள்ளது. இவற்றை சமைத்தாலும் நீங்காது. அதனால் இவற்றை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும்.
குடல் பகுதி:
ஆட்டின் குடலை விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல கோழியின் குடல் ஆனது சாப்பிட கூடாது. பெரும்பாலான கடைகளில் கோழியின் குடல் நீக்கப்பட்டு விற்கப்படுகிறது. கோழியின் குடலில் பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் இருக்கிறது. அதனால் இவற்றை சுத்தம் செய்தாலும் முழுமையாக சுத்தம் செய்ய முடியாது,. அதனால் இதனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
தலை பகுதி:
சில நபர்கள் சிக்கனின் தலை பகுதியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இவை உடலிற்கு தீங்கான ஒன்றாக இருக்கிறது. இதில் அசுத்தமான தீவனம் மற்றும் சுற்றுசூழலில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கலாம். இவை நாள்பட இருப்பின் அப்படியே படிந்து இருக்கும். இதனை எடுத்து கொள்வதன் மூலம் தீராத நோயை ஏற்படுத்தக்கூடும்.
கால் பகுதி:

சிக்கனின் கால்களை விரும்பி சாப்பிடுபவர்கள். இவற்றின் சுவையானது சற்று அதிகமாக இருக்கும். சிக்கனில் கால்கள் ஆனது பல் இடத்திற்கு செல்வதால் அதில் பாக்ட்ரியாக்கள் ஆனது நிறைய இருக்கும். அதனால் இவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியது. அதனால் இதனை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தோல் பகுதி:
சிக்கனின் தோலில் கொழுப்பு ஆனது நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் இதயத்தை பாதிக்க செய்யும். அதனால் கடையில் இருந்து வாங்கி வரும் போதே தோலை நீக்கி விட்டு வாங்கி வந்து சமையுங்கள். சிக்கின் தோலுடன் சமைப்பது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேல் கூறியுள்ள சிக்கன் பாகங்களை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |













