உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்…?

உருளைக்கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

உருளைக்கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

வணக்கம் நண்பர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி பார்க்கப்போகிறோம். நம் வாழ்வில் அன்றாடம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஒவ்வொன்றிலும் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன. அந்த வகையில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. அதனால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவோம்…

உருளைக்கிழங்கு மருத்துவ பயன்கள்:

உருளைக்கிழங்கு மருத்துவ பயன்கள்

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஓன்று தான் இந்த உருளைக்கிழங்கு. இது பூமிக்கு அடியில் விளைகின்ற உணவு பொருள் ஆகும். இந்த உருளைக்கிழங்கு தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பயிர்வகை என்று கூறுகிறார்கள். இந்த உருளைக்கிழங்கு பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகள் மூலம் உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்
 • உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது.
 • அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுவகை பொருளாக உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும் இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்வதால் மலசிக்கல் வராமல் தடுக்கிறது.
 • உருளைக்கிழங்கு விரைவில் செரிமாணம் ஆகக்கூடிய உணவு பொருளாக இருப்பதால் இது குழந்தைகளின் உணவாக பயன்படுகிறது.
 • இது நமது உடலில் ஏற்படக்கூடிய குடல் புற்று செல்களை உற்பத்தி அதிகரிக்காமல் தடுக்கிறது.
 • உருளைக்கிழங்கு இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு படிவதை தடுப்பதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 • இந்த உருளைக்கிழங்கு சரும கோளாறுகளை தடுக்கிறது. இது சருமத்தை மிருதுவாக வைக்கிறது. மேலும், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் வருவதை தடுக்கிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள்
 • இதில் வைட்டமின் C மற்றும் கரோடின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் இது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஸ்கர்வி நோய் வருவதை தடுக்கிறது.
 • உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்த குறைபாடுகளை தடுக்கிறது.
 • நமது மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. மேலும் இதில் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
 • புற்றுநோய் வருவதை தடுக்கக்கூடிய உணவு பொருளாக உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

உருளைக்கிழங்கு தீமைகள்:

 • முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காரணம் முளைவிட்ட உருளைக்கிழங்கில் அதிக நச்சுக்கள் அடங்கியுள்ளன. அதனால் இது குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
 • இந்த முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
 • உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வாயு கோளாறுகள் ஏற்படுகிறது.
 • இந்த உருளைக்கிழங்கை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்வதால் தலைவலி, இரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் வேகமான நாடித்துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
 • இந்த முளைவிட்ட உருளைக்கிழங்கை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காரணம், இதை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil