இயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..! kadukkai benefits in tamil

kadukkai benefits in tamil

கடுக்காய் மருத்துவ பயன்கள்..! Kadukkai Benefits in Tamil..!

கடுக்காய் பயன்கள்: தினமும் காலையில் இஞ்சிச்சாறு, பகலில் சுக்கு காபி, இரவில் தூங்குவதற்கு முன், விதை நீங்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்தி வர உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும், கபம் சமநிலைப்படும். இதற்கு கடுக்காய் (kadukkai) பெரிதும் உதவுகிறது.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண், பெண் உறவுகளை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.

மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!

இஞ்சி கல்பம்:

இஞ்சி கல்பம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1.  தேன் – 1/4 லிட்டர்
  2. இஞ்சி – 1/2 துண்டு

இஞ்சி கல்பம் தயாரிக்கும் முறை:

இஞ்சியை சுத்தமாக கழுவி அவற்றிலிருக்கும் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி, பின்பு மையாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரைத்த இஞ்சியை பிழிந்து சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி படியவிடுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்.

தெளிந்த இஞ்சி சாற்றில் நன்கு பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் அவற்றில் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும்.

இது தான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும்.

இந்த இஞ்சி கல்பம் பித்தத்தை சமன்படுத்தும், செரிமான கோளாறுகளுக்கு, வயிற்று கோளாறுகளுக்கு மற்றும் தலை கிறுகிறுப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த இஞ்சி கல்பம் பெரிதும் உதவுகிறது.

மேலும் இந்த இஞ்சி கலபம் புற்று நோய் வராமல் தடுக்கிறது, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமலும் இந்த இஞ்சி கல்பம் கட்டுப்படுத்துகிறது.

சுக்கு கல்பம்:

சுக்கு கல்பம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. 1/4 கிலோ – சுக்கு
  2. 25 கிராம் – சுண்ணாம்பு
  3. 1 லிட்டர் – தண்ணீர்

சுக்கு கல்பம் செய்முறை:

சுக்கு கல்பம் செய்ய முதலில் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இது தான் சுக்கு கல்பம்.

மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும், வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும் போக்கும்.

10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன ?

கடுக்காய் கல்பம்:

கடுக்காய் கல்பம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய் (kadukkai)
  2. அரை லிட்டர் பசும்பால்

கடுக்காய் கல்பம் செய்முறை:

Kadukkai podi thayarippu: பாலில் கடுக்காயைப் (kadukkai) போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும்.

மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.

இந்தக் கடுக்காய் கல்பத்தை (kadukkai ) ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை (kadukkai ) மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியம்