வாய் கசப்பு போக என்ன செய்ய வேண்டும்..!

Advertisement

வாய் கசப்பு நீங்க பாட்டி வைத்தியம் | Vai Kasapu Home Remedies

Vai Kasapu Home Remedies:- நமது உடலில் காய்ச்சல் ஏற்படும் போது  ஏற்படக்கூடிய ஒரு சாதாரணமான விஷயம் தான் வாய் கசப்பு. இருப்பினும் இந்த வாய் கசப்பு பிரச்சனை வந்து விட்டால் சரியாக உணவருந்த முடியாது, உணவின் சுவையும் தெரியாது. குறிப்பாக சாப்பிடுவதற்கே பிடிக்காமல் போய்விடும். இத்தகைய கசப்பு சுவை தொண்டையில் அதிக எரிச்சல் மற்றும் சாப்பிடும் உணவின் சுவையை உணர முடியாது செய்து விடும். சரி இந்த பதிவில் வாய் கசப்பு வர காரணம் மற்றும் வாய் கசப்பு நீங்க பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.

வாய் கசப்பு காரணம் – Vai Kasapu Reason in Tamil 

வாயில் கசப்பான சுவைக்கான காரணங்கள் பியோரியா, பல் திசுக்கட்டி, பல்லீறு தொற்று நோய், அல்சர் மற்றும் பல் நிரப்புதல் போன்ற பல் பிரச்சனைகள் வாய் கசப்பு ஏற்பட காரணம் ஆகும்.

பேறுகாலத்திற்கு முந்தைய வைட்டமின்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மனச்சோர்வு, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற கர்ப்பம் சார்ந்த மருந்துகள் போன்றவை வாய் கசப்பு ஏற்பட காரணம் ஆகும்.

மருந்துகள் காரணமாக உடல் ஆரோக்கியம் கசப்பான சுவையை உருவாக்குகிறது. அதாவது நீரிழிவு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கு  மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் வாய் கசப்பாக இருக்கும்.

பொதுவாக வாய்வழி சுகாதார நிலை கசப்பான சுவைக்கு ஒரு பொதுவான காரணம். எனவே, ஒவ்வொரு முறை உணவுக்கு பின்னும் உங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள் அல்லது மவுத்வாஷ்யை பயன்படுத்துங்கள்.

கர்ப்பம், எஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் காரணமாக, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக கூட வாய் கசப்பு பிரச்சனை ஏற்படலாம்.

ஆசிட் பின்னோக்கி வழிதல், அல்லது காஸ்ட்ரோ-எபோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) போன்ற நோய்கள், காரமான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக வாயில் கசப்பு சுவை ஏற்படுகிறது.

அமிலங்கள் தொண்டைக்குள் மீண்டும் கசிவதால் இந்நோய் ஏற்படுகிறது. GERD-யின் அறிகுறிகள் நெஞ்செரிச்சல், தலைவலி, வாயு, தொண்டை புண், கெட்ட மூச்சு, வீக்கம், மற்றும் குமட்டல்.

வாய் கசப்பு நீங்க பாட்டி வைத்தியம் – Bitter Taste in Mouth Remedy in Tamil

தேவையான பொருட்கள்:

  1. ஆரஞ்சு பழம்  – ஒரு சுளை
  2. கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
  3. பனை வெல்லம் – தேவையான அளவு
  4. சோம்பு – 1/4 ஸ்பூன்
  5. காய்ச்சிய நீர் – 150 மில்லி (ஆறியது)

செய்முறை:

உரலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கொத்து கொத்தமல்லி இலை மற்றும் 1/4 ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து கொள்ளுங்கள்.

இடித்த இந்த கலவையில் 150 மில்லி காய்ச்சிய நீரை சேர்க்க வேண்டும், பின் அதனுடன் பனை வெல்லம் தேவையான அளவு மற்றும் ஆரஞ்சு பழம் ஒரு சுளை பிழிந்து விட்டு நன்றாக கலந்து விடுங்கள்.

இந்த பானத்தை அருந்தினால் காய்ச்சல், வயிற்று புண் போன்ற காரணங்களினால் ஏற்படும் வாய் கசப்பு பிரச்சனை குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement