வரகு அரிசி மருத்துவ பயன்கள் | Varagu Rice Benefits in Tamil

Varagu Rice Benefits in Tamil

வரகு அரிசி நன்மைகள் | Varagu Arisi Nanmaigal

விலங்குகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி உணவு சாப்பிடாமல் யாரும் இருக்க முடியாது. உணவுகளில் முதலிடத்தில் இருப்பது அரிசி. அரிசி வகைகளில் வரகு அரசி, சாமை அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசி போன்ற பல வகை அரிசிகள் உள்ளன. வரகு அரிசியில் அதிகமாக நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது இந்த வரகு அரிசி. வரகு அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

சிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி?

 varagu arisi benefits in tamil

மற்ற நேரத்தை விட கோடை காலத்தில் தண்ணீர் தாகம் அடித்துக்கொண்டே இருக்கும். வரகு அரசியில் சமைக்கப்பட்ட உணவினை சாப்பிடும்போது தாகம் பிரச்சனை தணிந்துவிடும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டானால் அதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் வரகரிசி சிறுநீரக பகுதிகளை மேம்படுத்த செய்கிறது.

இரத்த ஓட்டம் சீராக:

 varagu arisi nanmaigal

இரத்த ஓட்டமானது சீராக செயல்பட இரத்தத்தில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். வரகரிசியில் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும். இதுமட்டுமல்லாமல் இரத்ததை சீராக செயல்பட வைக்கிறது. உடலில் இரத்த ஓட்டமானது சீராக இயங்குவதற்கு வரகரிசியில் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை எடுத்துக்கொள்ளலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

மலச்சிக்கல் குணமாக:

 varagu rice benefits in tamil

பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்றால் உணவில் மாவுச்சத்து அதிகம் உள்ள பொருள்களையும், நார்ச்சத்து குறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. வயிறு வலி குணமாக, குடலில் ஏற்படக்கூடிய புண்கள் ஆறுவதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை வரகரிசியில் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யலாம்.

ஆண்மை குறைபாடு நீங்க:

 வரகு அரிசி நன்மைகள்

இப்போதெல்லாம் இளம்வயதில் இருக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனதில் கவலைகள் அதிகமாகி விட்டன. இதனால் ஆண்மை சம்மந்தமான குறைபாடு பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்மை குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலை அல்லது மதிய நேரத்தில் வரகு அரிசியில் சமைக்கப்பட்ட உணவினை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆண்மை குறைபாடு பிரச்சனையை விரைவில் குணப்படுத்தலாம்.

பாரம்பரிய காட்டுயாணம் அரிசி பயன்கள்

உடல் எடை குறைய:

 வரகு அரிசி மருத்துவ பயன்கள்

இன்று பலரும் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று அதிகமான உடல் எடை. அதிக உடல் எடை இருப்பவர்கள் நீண்ட நேரம் எந்த வேலைகளையும் செய்ய முடியாது, மாடி படிகளில் ஏறி வரும்போது மூச்சு வாங்கும் பிரச்சனை போன்ற சிரமங்களால் அவதிப்படுவார்கள். உடல் எடை அதிகமாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேவையில்லாமல் கொழுப்புகள் சேருவதினால் தான். வரகு அரசியில் நார்ச்சத்து எனும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் உடல் கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதற்கு உண்டு. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க:

 varagu arisi benefits in tamil

உடலில் உயிர் இருப்பதற்கும், உடலில் இருக்கக்கூடிய அனைத்து பாகங்களும் சீராக இயக்குவதற்கு முக்கியமான உறுப்பாக இருப்பது இதயம் தான். இதயம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கக்கூடியது இந்த வரகரிசி. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது வரகரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவினை எடுத்து வந்தால் இதயம் ஆரோக்கியாக இருக்கும்.

சிவப்பு அரிசி பயன்கள்

புண்கள் குணமாக:

 varagu rice benefits in tamil

வாகனத்தில் செல்லும் போது கவன குறைவால் சிலருக்கு உடலில் காயங்கள் ஏற்படும், சிலருக்கு கை கால்களில் புண்கள் ஏற்பட்டு பல நாட்களாக ஆறாமல் இருக்கும். வரகு அரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்க கூடிய புண்கள், வெட்டுக்காயங்கள், தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. இதுமட்டுமல்லாமல் பாதத்தில் வெடிப்புகள் இருந்தாலும் அதனை உடனே சரி செய்ய உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்