வாத நோய் ஏற்பட காரணம்
நம் முன்னோர்களின் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வாழ்க்கை மாற்றம் போன்றவற்றால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவர்களை நாடி செல்கின்றார்கள். இவர்கள் தங்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு மாத்திரை மருந்துகளை எழுதி தருகிறார்கள். இதனால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் காரணத்தை அறிந்து கொண்டால் அவை வராமல் தடுக்கலாம்.
வாத நோய் என்றால் என்ன.?
வாத நோய் அல்லது வாத கோளாறுகள் என்பது மூட்டுகள் அல்லது இணைப்பு திசுக்களை பாதிக்கும் நாள்பட்ட, அடிக்கடி இடைவிடாத வலியை ஏற்படுத்தும் நிலையை தான் வாத நோய் என்று கூறுகிறோம்.
வாத நோய் எதனால் ஏற்படுகிறது:
வாத நோய் ஒரு மூட்டுக்குள் அதிகப்படியான இரத்த ஓட்டம் மற்றும் தசைநார்கள் நீட்டப்படுவதால் ஏற்படுகிறது. மேலும் வாத நோய் பிரச்சனை ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது. இதன் முக்கிய காரணங்களை பற்றிய அறிந்து கொள்வோம் வாங்க..
- அதிர்ச்சியான செய்தி
- நோய்த்தொற்று
- வளர்சிதை மாற்றம்
- நரம்பு மண்டல பிரச்சனை
- மூட்டுகளில் ஏற்படும் அலர்ஜி பிரச்சனை
- சுற்றுசூழலால் ஏற்படும் பிரச்சனை
- வயது
- மரபணு மாற்றம்
வாத நோய் வராமல் தடுக்க:
வாத நோய் வந்த பிறகு அதற்கு என்ன செய்வது என்று யோசனை செய்யாமல் அவை வருவதற்கு முன்னே தடுக்க வேண்டும். அதற்கான வழிகளை அறிந்து கொள்வோம்.
கருவில் குழந்தை வளரும் போது தாய்க்கு எந்த விதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்காக தான் 5 மாதத்தில் மருந்து கொடுத்தல் நிகழ்ச்சியையும் 7-வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். இதன் மூலம் மனது ஆனது மகிழ்ச்சியாக இருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வாயு பிரச்சனை ஏற்படுத்தும் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
வாத நோய் வகைகள்:
- முடக்கு வாதம்
- இளம்பிள்ளை வாதம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |