வெள்ளை கிழங்கான் மீன் நன்மை மற்றும் தீமைகள்

Advertisement

வெள்ளை கிழங்கான் மீன் எப்படி இருக்கும்

கிழங்கான் மீனில் இரண்டு வகை இருக்கிறது. அதில் நாய்கிழங்கான், கருப்பு கிழங்கான் என்ற இரு வகை இருக்கிறது. அதில் இன்னொரு வகை தான் வெள்ளை கிழங்கான். கருப்பு கிழங்கான் மீன் ஆனது தடிமனாகவும், பார்ப்பதற்கு கருப்பாகவும் உருண்டையாகவும் இருக்கும். வெள்ளை கிழங்கான் மீன் ஆனது வெள்ளை நிறத்திலும் 1 ஜாண் நீளத்தில் காணப்படும். இந்த வெள்ளை கிழங்கானை வறுத்தாலும், பொறித்தாலும் சுவையாக இருக்கும். இவை எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டீர்கள், இவற்றிக்கு உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்களை அறிந்து கொள்வோம்.

வெள்ளை கிழங்கான் மீன் சத்துக்கள்:

வெள்ளை கிழங்கான் மீனில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின்களும் காணப்படுகிறது.

வெள்ளை கிழங்கான் நன்மைகள்:

குழந்தைகளுக்கு இந்த மீனை கொடுப்பதால் வளர்ச்கை அதிகரிக்கும். கோடைகாலத்தில் அதிகமாக சாப்பிடும் மீனாக வெள்ளை கிழங்கான் இருக்கிறது.

வெள்ளை கிழங்கான் மீனை உணவில் சேர்த்து கொள்வதால் நரம்பு மண்டலம் ஆனது ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

உடல் சூட்டை குறைக்க செய்யும். இதனை உங்களின் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூல நோய் சரியாகும். இந்த மீன் ஆனது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த கூடியது. அதனால் இதனை சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டினால் ஏற்பட கூடிய பிரச்சனை வராமல்இருக்கும்.

இந்த மீன் ஆனது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்க கூடியது. அதனால் புற்றுநோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மீனை எடுத்து கொள்ளலாம்.

வெள்ளை கிழங்கான் மென் சாப்பிடுவதால் தோல் பிரச்சனைகளை சரி செய்ய கூடியது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, எரிச்சல், போன்றவற்றை தடுப்பதற்கு உதவுகிறது.

கிழங்கான் மீனை சாப்பிடுவதன் மூலம் இதய பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல் வாத பிரச்சனை வராமலும் தடுக்க முடியும்.

வெள்ளை கிழங்கை மீனை எப்போது சாப்பிடலாம்:

 வெள்ளை கிழங்கான் மீன் ஆனது குளிர்ச்சி தன்மை உடையதால் வெயில் காலத்தில் சாப்பிடுவது சிறந்தது. இதனை வாரத்தில் ஒருமுறை எடுத்து கொள்வது நல்லது. 

வெள்ளை கிழங்கான் மீன் தீமைகள்:

வெள்ளை கிழங்கான் மீனில் நன்மைகள் இருந்தாலும் கூட, அதில் சிலவகை தீமைகளும் இருக்கிறது.கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மீனை எடுத்து கொள்ள கூடாது.

இதனை அதிகமாக எடுத்து கொள்வதன் மூலம் தோல் புற்றுநோய் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இதனை அளவோடு எடுத்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

Advertisement