வெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..!

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்..!

வெள்ளைப்படுதல் வீட்டு வைத்தியம்: பருவம் அடைந்த பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் இந்த பிரச்சனையை யாரும் அதிகமாக கண்டுகொள்வதில்லை. இந்த வெள்ளை படுதல் பிரச்சனை பெண்களுக்கு பருவம் அடையும் வயதிலும், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னரும், கருவுற்றிருக்கும் போதும், இந்த வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் தான். ஆனால் சில பெண்களுக்கு இந்த வெள்ளை படுதல் பிரச்சனை எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் கண்டிப்பாக தங்களது உடலை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2

அதேபோல் வெள்ளை படுதல் அதிகரிக்கும் போதும், அரிப்பு ஏற்படும் போதும், துர்நாற்றம் அடிக்கும் போதும், குறிப்பாக நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சையை பெறவேண்டியது மிகவும் அவசியம். இருப்பினும் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே இந்த வெள்ளை படுதல் பிரச்சனையை (vellai paduthal veetu vaithiyam) சரி செய்துவிட முடியும்.

சரி இங்கு வெள்ளை படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம் (White Discharge Treatment in Tamil): 1

உளுந்து மற்றும் பார்லி இரண்டிலும் தலா 100 கிராம் எடுத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம். இவ்வாறு தினமும் ஒரு முறை குடித்து வர இந்த வெள்ளை படுதல் பிரச்சனை குணமாகிவிடும்.

இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..! ஒரே வாரத்தில்

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம் (White Discharge Treatment in Tamil): 2

இந்த வெள்ளை படுதல் பிரச்சனை சரியாக தினமும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் ஏதேனும் ஒன்றை ஜூஸ் செய்தும் பருகலாம்.

இந்த பழங்களில் உள்ள விட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்டும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அழித்துவிடும். அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தை இந்தப் பழங்கள் போக்கும்.

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம் (vellai paduthal tips): 3

இந்த வெள்ளை படுதல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சைக்கு நல்ல தீர்வாக அமையும்.

இடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5ல் ஒன்னு போதும்

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்: 4

நெல்லிக்காயில் ஆன்டி-இன்ஃப்ளேமட்டரி, ஆன்டி-ஆக்சிடேட்டிவ் தன்மை இருப்பதால் இந்த வெள்ளைப்படுதல் பிரச்னையை குணப்படுத்தும். எனவே நெல்லிக்காயை ஜூஸ் செய்து சாப்பிட்டு வர, 48 நாட்களிலேயே இந்த வெள்ளை படுத்தல் பிரச்சனை சரியாகிவிடும்.

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்: 5

கர்ப்பப்பையை வலுவாக்குவதில் கற்றாழை சிறந்த மருந்தாக விளங்குகின்றது. வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு, பிசிஓடி, சிஸ்ட், கர்ப்பப்பை புற்றுநோய் என எந்த கர்ப்பப்பை தொடர்பான நோய்க்கும் கற்றாழை ஜூஸ்தான் பெஸ்ட். எனவே 48 நாளைக்கு வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் எடுத்து, அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், இந்த வெள்ளை படுதல் பிரச்சனை சரியாகிவிடும்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

வெள்ளை படுதல் பாட்டி வைத்தியம்: 6

சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு பருகி வருவதினால் இந்த வெள்ளை படுதல் குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips