வேம்பாளம் பட்டை நன்மைகள் | vembalam pattai uses
பொதுவாக இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏனென்றால் இந்த பட்டையானது அதிகளவு கடைகளிலோ கிடைப்பது குறைவு தான். இது நாட்டு மருந்து கடைகளில் தான் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆகவே அப்படி என்ன உள்ளது என்று அனைவருமே நினைக்கலாம். ஆனால் இது நமக்கு பலவகைகளில் உதவி செய்கிறது..! அதேபோல் மருத்துவ பயன்கள் கொண்டது. அதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Vembalam Pattai Payangal:
இந்த பட்டை சிவப்பு நிறத்தில் இருப்பதால் அது கலர் டை தயாரிக்க பயன்படுகிறது. உணவு பொருட்களுக்கு நிறம் கொடுக்கவும் பயன்படுத்தபடுகிறது.
வெரிகோஸ் வெயின்ஸ், சரும வடுக்கள் போன்றவற்றிற்கு வேம்பாளம் பட்டையை தூளாக்கி கடுகு எண்ணெய் அல்லது தைலத்துடன் சூடுபடுத்தி பயன்படுத்தலாம். அதேபோல் மூட்டு வலிக்கும் இந்த எண்ணெயுடன் சேர்த்து தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.
நல்ல எண்ணெயில் இந்த வேம்பாளம் பட்டையை போட்டு மூட்டுகளில் தடவி வந்தால் விரைவாக வலி, அழற்சி குறைந்து விடும். அதேபோல் பட்டையை போட்டு தண்ணீருடன் கொதிக்கவிட்டு கஷாயம் வைத்து குடித்தால் வயிற்றுப்போக்கு அல்சர் மற்றும் சரும காயங்கள் குணமாகும். தீராத இருமல் குணமாகும்.
அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்
இந்த பட்டையுடன் பெருங்காயம், கருஞ்சீரகம் சேர்த்து காயங்களுக்கு பற்று போடலாம்.
அதேபோல் இரவில் இந்த பட்டையை தண்ணீரில் ஊறவிட்டு மறுநாள் காலையில் குடித்தால் இருதயத்திற்கு நல்லது. உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியாக்கும், இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் ஒரு நாள் முழுவதும் இந்த பட்டையை பயன்படுத்துவதால் முடியின் வேர் வரை வலிமையாகிறது.
இந்த எண்ணெயை நகங்களில் தடவி வந்தால் சொத்தை நகம் சரியாகும். நகத்தில் ஏதேனும் புண் இருந்தால் அதுவும் சரியாகி விடும். இதனை கஷாயம் செய்து குடித்து வர பக்கவாதம் குணமாகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் பயன்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |