வெண்பூசணி தீமைகள் | Venpoosani Side Effects in Tamil

Advertisement

வெண்பூசணி தீமைகள் | Venpoosani Side Effects in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெண்பூசணி தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வெண்பூசணி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வெண்பூசணியை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, வெண்பூசணியை குறைவாக எடுத்து கொள்வது நல்லது. வெண்பூசணியை அதிகமாக சாப்பிடுபவர்கள் உடலில் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெண்பூசணியின் அறிவியல் பெயர் பெனின்கசா ஹிஸ்பிடா என்பதாகும். வெண்பூசணியை ஆங்கிலத்தில் அஷ் கார்டு, விண்டர் கார்டு, வைட் பம்ப்கின், வேக்ஸ் கார்டு மட்டும் சைனீஸ் வாட்டர்மெலான் போன்ற பல பெயர்களால் அழைப்பார்கள். வெண்பூசணியில் கூட்டு பொரியல் மற்றும் சாம்பார் போன்ற உணவு பொருட்கள் செய்து சாப்பிடுவார்கள்.

ஏகப்பட்ட மருத்துவ பயன்கள் இந்த வெண்பூசணி சாப்பிடுவதால்

வெண்பூசணி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

வெண்பூசணி தீமைகள்

  • வெண்பூசணி நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடியது ஆகும். அந்த அளவிற்கு அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. ஆனால், அதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • வெண்பூசணி அதிகம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். எனவே, அப்படி இருக்கும் நபர்கள் வெண்பூசணியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • வெண்பூசணியை அதிகம் சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, மற்றும் சைனசிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏனென்றால் வெண்பூசணி குளிர்ச்சியான தன்மை கொண்டது. ஆகையால்,  உடலிற்கு குளிர்ச்சி ஒத்து கொள்ளாது என்று கூறுபவர்கள் வெண்பூசணி அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • குறிப்பாக, சளி, ஆஸ்துமா, மற்றும் சைனசிடிஸ் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் வெண்பூசணி அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஒருவேளை குளிர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள், வெண்பூசணி  சாப்பிட விரும்பினால் வெண்பூசணியுடன் சிறிது தேன் அல்லது மிளகு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
  • மேலும், வெண்பூசணியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிறு மந்த நிலை, செரிமான மின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
  • குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக வெண்பூசணி கூட்டோ அல்லது சாறு கொடுப்பது நல்லதல்ல. வெண்பூசணி உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், சிறு குழந்தைகளுக்கு குறைவாக கொடுக்க வேண்டும்.
  • அதேபோன்று, குளிர்காலங்களிலும் மழைக்காலங்களிலும் வெண்பூசணியை குறைவாக சாப்பிட வேண்டும்.
  • எனவே, வெண்பூசணியை சராசரியான அளவில் எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement