வேர்க்கடலை நன்மைகள் | Verkadalai Benefits in Tamil

Verkadalai Benefits in Tamil

நிலக்கடலை பயன்கள் | Nilakadalai Uses in Tamil

வேர்க்கடலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல விதமான சத்துக்கள் அடங்கியுள்ளது. வேர்க்கடலையில் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இந்த நிலக்கடலையானது உலகெங்கும் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. வேர்க்கடலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

கொண்டைக்கடலை பயன்கள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள:

 வேர்க்கடலை நன்மைகள்

அதிக உடல் எடை இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்துடன் உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

குடல் புற்றுநோய் குணமாக:

 verkadalai benefits in tamil

புற்றுநோய்களில் பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் தான் உலகெங்கும் அதிகமாக வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுத்து நிறுத்தும்.

வேர்க்கடலையில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்படமால் பாதுகாக்கிறது. வாரத்தில் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவுத்தான்.

செரிமான கோளாறை சரி செய்ய:

 நிலக்கடலை பயன்கள்

வேர்க்கடலையில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய செரிமான கோளாறு பிரச்சனையை சரி செய்கிறது. அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டு வரலாம்.

பாசி பயறு பயன்கள்

இதய சம்பந்தமான நோய்க்கு:

 nilakadalai uses in tamil

இன்றைய காலத்தில் இதய சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இதயம் சார்ந்த மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வினை கொடுக்கும்.

அறிவாற்றல் அதிகரிக்க:

 peanuts benefits in tamil

ஒரு மனிதருடைய அனைத்து செயல்களுக்கும் முற்றுப்புள்ளியாக இருப்பது மூளை. தினமும் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஞாபக திறனும் அதிகரிக்கிறது. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் உடலில் இருந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை இல்லாமல் செல்வதற்கு  நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–>ஆரோக்கியமும் நல்வாழ்வும்