Verkuru Home Remedies in Tamil
கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த வேர்க்குருவை சரி செய்வதற்கு பல பவுடர்களை பயன்படுத்துவார்கள். இந்த பவுடர் அடிக்கும் போது வேர்க்குரு உள்ள இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும். ஆனால் அதனை நிறுத்தினால் மறுபடியும் வேர்க்குரு வந்துவிடும். அதனால் தான் இந்த பதிவில் வேர்க்குரு எதனால் வருகிறது. அதற்கு சிறந்த பவுடர் எதுவென்று அறிந்து கொள்வோம் வாங்க..
வேர்க்குரு வர காரணம்:
நம்முடைய உடலில் வியர்வை அதிகமாகும் போது மூளையிலிருந்து வியர்வை சுரப்பிற்கு ஒரு செய்தி வருகின்றது. இதன் மூலமாக வியர்வை சுரப்பிகள் வியர்வையை அதிகமாக சுரக்கின்றது. இந்த வியர்வையானது நம்முடைய உடலின் தோலின் மேற்பரப்பில் படிந்து நம்முடைய உடல் உஸ்னத்தின் மூலம் நீராவியாக மாறுகிறது. இதன் மூலம் நம்முடைய உடல் சூடு தணிகிறது.
நம்முடைய உடல் சூடு எந்தளவிற்கு அதிகமாகிறதோ அந்த அளவிற்கு வியர்வை சுரப்பிகளுக்கு வேலை அதிகரிக்கிறது. இதிலிருந்து அதிகமாக இறந்த செல்கள் வெளியேறுகிறது. இறந்த செல்களும், வியர்வையும் சேர்ந்து வியர்வை வெளியேறும் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் வியர்வை வெளியேறாமல் தோலிற்கு கீழே சின்ன சின்ன மொட்டுகளாக வருகின்றது.
சிறந்த பவுடர்:
நாம் வேர்க்குருவிற்கு பயன்படுத்தும் பவுடரை பயன்படுத்தும் போது அந்த இடத்தில் எரிச்சலை குறைத்து குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. ஆனால் நல்லா இருக்கின்ற இடத்தில் வேர்க்குருவை அதிகப்படுத்தும். அதனால் வேர்குருவிற்கு பவுடர் அடிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் வேர்க்குருவை செய்ய வேண்டும்.
How to Prevent Heat Rash:
முதலில் கோடைக்காலத்தில் காட்டன் ட்ரெஸ் அணிய வேண்டும், அதுவும் ரொம்ப இறுக்கமாக அணியாமல் கொஞ்சம் தளர்வாக அணிய வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்பவராக இருந்தால் இரண்டு அல்லது 3 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதுவே வேலைக்கு செல்பவராக இருந்தால் காலை ஒரு முறையும், வேலை விட்டு வந்த பிறகு ஒரு முறை குளிக்க வேண்டும்.
How to Manage Heat Rash:
வேர்க்குருவிற்கு ஈரமான துணி அல்லது ஐஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும். செயற்கையாக தயாரிக்கப்பட்ட எந்த விதமான கிரீம்களையும் பயன்படுத்த வேண்டாம்.
கற்றாழையை எடுத்து உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். வேர்க்குருவாக இருந்தால் 3 அல்லது 4 நாட்களுக்குள் போகிவிடும்.
ஒருவேளை உங்களுக்கு 3 நாட்களுக்கும் மேல் வேர்க்குரு நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |