Verkuru Treatment in Tamil
இந்த கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளித்தாலும் குளித்த மாதிரியே இல்லை. அதுமட்டுமில்லாமல் குளித்த கொஞ்ச நேரத்திலே வியர்க்க ஆரம்பித்து விடுகிறது. வியர்வை அதிகமாகி அரிக்க ஆரம்பித்து விடும். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே தோல் சிவந்த நிறமாக மாறிவிடும். சில நபர்களுக்கு வியர்க்குரு வர ஆரம்பித்து விடும். இதன் சரி செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனாலும் வியர்குருவை அந்த சமயத்தில் அரிக்காமல் இருக்கும். சிறிது நேரம் கழித்து அரிக்க ஆரம்பித்து விடும். இதற்கான நிரந்தர தீர்வை கிடைத்திருக்காது. அதனால் இந்த பதிவின் வியரகுருவிற்கான நிரந்தர தீர்வை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வேர்க்குரு சரி செய்வது எப்படி.?
நாள் முழுவதும் அக்குள் வியர்வை நாற்றம் வராமல் பிரஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..
ஆடை எப்படி அணிய வேண்டும்:
இந்த கோடைக்காலத்தில் ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும். முக்கியமாக காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். ஏனென்றால் இறுக்கமாக ஆடை அணிந்தால் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை அதிகமாக சுரக்கும். அதனால் தளர்வான ஆடைகளை அணிவது நல்லது.
தண்ணீர் குடிக்க வேண்டும்:

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை ஜூஸ், பழங்கள் சாறு போன்ற நீர்ச்சத்து உள்ள பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டாலே வியர்க்குரு பிரச்சனை வராமலும் தடுக்கலாம், வியர்க்குரு இருந்தாலும் அதை தணிக்கலாம்.
ஓட்ஸ் குளியல்:

கற்றாழை ஜெல்:

கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்சிணேற்ற பண்புகள் வியர்குருவை நீக்க உதவுகிறது. இதற்கு நீங்ககள் கற்றாழையை தோல் சீவி அதில் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து வியர்க்குரு உள்ள பகுதியில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு குளித்து விடவும்.
எவ்வளவு நேரம் ஆனாலும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இந்த Tips மட்டும் ட்ரை பண்ணுங்க..!
சந்தனம்:

சந்தனம் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனால் ஒரு பவுலில் தேவையான அளவு சந்தனத்தை எடுத்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை வியர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம். இந்த முறையை வாரத்தில் 2 அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |














