வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Updated On: October 16, 2025 2:54 PM
Follow Us:
Vertigo home remedies
---Advertisement---
Advertisement

Vertigo home remedies 

மயக்கம் வருவதை தடுக்க: அடிக்கடி மயக்கம் வருது இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், சிலர் உடம்பில் தேவையான சத்து இல்லை என்று சொல்வார்கள். உண்மையான காரணம் அது கிடையாது. உடம்பில் அதிகப்படியான பித்தம் இருந்தால் இந்த மயக்கம் ஏற்படும். ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு பலகாரணங்கள் இருக்கும்.

மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இரண்டுமே மூளையுடன் தொடர்புடையது. கிறுகிறுப்பு மற்றும் மயக்கம் இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறலாம்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்புகளை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்துகிறது. தீவிரமான கிறுகிறுப்பையே மயக்கம் என்று சொல்லலாம்.

சரி இந்த தலை சுற்றல் சரியாக மற்றும் மயக்கம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது படித்தறிவோம் வாங்க…

பித்த தலை சுற்றல் குணமாக / மயக்கம் வருவதை தடுக்க (Vertigo home remedies):

சிலருக்கு உடலில் அதிகளவு பித்தம் இருந்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த பித்தத்தை குறைக்க சிலவகை உணவு பழக்கங்களை தவிர்த்து கொள்வதினாலும், சிலவகை உணவுகளை பின்பற்றுவதினாலும் பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.

அதேபோல் டீ மற்றும் காபி அதிகம் அருந்துவதை குறைத்து கொள்ளவும். மேலும் உணவில் எலுமிச்சை பழத்தினை அதிகம் சேர்த்து கொள்ளவும்.

இவ்வாறு செய்து வருவதினால் உடலில் உள்ள பித்தம் குறைந்துவிடும், பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம் சரியாக (Vertigo home remedies):-

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போதும் மயக்கம் ஏற்படும். நாம் அதிக நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, நம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அப்போது மயக்கம் ஏற்படும்.

அந்த சமயத்தில் உப்பு அல்லது உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிடுவதினால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏன்னெனில் உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

தலைசுற்றல் ஏற்பட்டவுடன் உடனடியாக உட்கார்ந்து கொள்ளவும் அல்லது படுத்துக்கொள்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

வெயிலினால் ஏற்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம் சரியாக (Vertigo home remedies):

வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் சக்தியை (எனர்ஜி) உறிஞ்சிவிடும். அதாவது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும் சில நேரங்களில் அதுவே மயக்கமாக மாறிவிடும்.

எனவே எப்போதும் வெளியே செல்லும் போது, எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.

மயக்கம் வருவதை தடுப்பது எப்படி ?

உங்களுக்கு மயக்கம் வரும்போது உடனடியாக படுத்து கால்களை மேலே உயர்த்தி வைத்து படுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.

மேலும், உங்களுக்கு மயக்கம் வரும்போது நார்த்தங்காய் உப்பில் ஊறுகாயை ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் நின்றுவிடும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

benefits of drinking buttermilk in summer in tamil

ஏன் கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்க வேண்டும் தெரியுமா..? தெரியலைனா தெரிஞ்சுக்கோங்க..!

body heat reduce juice in tamil

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் வகைகள்..!

Pregnancy Hip Pain Relief in Tamil

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..!

summer disease in tami

கோடை காலத்தில் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ..!

வாக்கிங் போகும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

kodaikaalathil seiya koodatha thavarugal

கோடைகாலத்தில் செய்யக்கூடாத தவறுகள்…!

வெயில் காலங்களில் வெற்றிலையை இப்படி கூட பயன்படுத்தலாமா?

How To Reduce Body Heat Naturally in Tamil

எப்போதும் இருப்பதை விட வெயில் காலத்தில் உடலில் அதிக ஹீட் இருக்கிறதா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!