Vilva Pazham Benefits In Tamil
சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை, கோடை காலத்தில் மட்டும் பழம் காய்க்கும். இதை உண்பதால் நம் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது. பொதுவாகவே நாம் சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்களில் தான் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பருவநிலைக்கு ஏற்றவாறு தான் காய் மற்றும் பழங்களும் காய்க்கிறது. ஒவ்வொரு பருவ நிலைகளில் ஒவ்வொரு விதமான பழங்களும் காய்களும் காய்க்கும்.
தற்போது கோடை காலம் என்பதால் கோடை காலத்தில் மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, வில்வ பழம் போன்ற பழங்கள் காய்க்கும். வில்வ மரங்களை நம் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு புண்ணியங்களை தரும். வில்வ இலைகளை சிவருமானுக்கு படைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வில்வ பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எனவே இன்றைய பதிவில் வில்வ பழத்தின் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
வில்வ பழத்தின் ஊட்டச்சத்துக்கள்:
வில்வ பழத்தில் ரைபோஃப்ளேவின், பீட்டா கரோட்டின், புரதம், மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி1 மற்றும் பி2, தயாமின், நியாசின், கரோட்டின் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல அளவிலான தாதுக்களும் நிறைந்துள்ளது. கூடுதலாக, இதில் நல்ல கொழுப்புகள் காணப்படுகிறது.
வில்வ பழத்தின் நன்மைகள்:
மலச்சிக்கல் நீங்கும்:
வில்வ பழத்தில் நார்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதனால் நீங்கள் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
சிறுநீரக ஆரோக்கியம்:
வில்வ பழத்தில் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்புகள் உள்ளன. இதில் தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் நிறைந்துள்ளது. இது உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பல வகையான சிறுநீரக பிரச்சனைகளை குறைக்கும். சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதனால் உங்களுக்கு இருக்கும் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கல்லீரலுக்கு நன்மை:
வில்வ பழத்தில் தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் நிறைந்துள்ளது. மேலும் இதில் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இது கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து நீங்க உதவும். கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதனால் உங்களுக்கு இருக்கும் கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம் மேம்படும்:
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் வில்வ இலைகளை சாப்பிடுவது அவ்வளவு நன்மை பயக்கும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் வில்வ இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். இந்த பானம் உங்களுக்கு இருக்கும் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
எதிர்ப்பு சக்தி வலுவாகும்:
வைட்டமின் சி, புரதம், பீட்டா கரோட்டின், தியாமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் வில்வ பழத்தில் காணப்படுகிறது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை வலுவாக்கும். இதனால் நோய் தொற்றுகள் ஏற்படாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |