வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் | Vitamin C Foods List in Tamil
Vitamin C Rich Foods in Tamil: நமது உடலுக்கு மிகவும் முக்கியமான சத்துகளுள் ஒன்றானது தான் இந்த வைட்டமின் சி. நம்முடைய உடல் எப்போதும் புத்துணர்ச்சியோடும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால் அதற்கென ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். வைட்டமின் சி சத்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது. உடலில் வைட்டமின் சி சத்து குறைவாக இருந்தால் ஸ்கர்வி (Scurvy) என்ற நோய் உருவாகிறது. இதுமட்டுல்லாமல் இரத்த அழுத்த பிரச்சனை, பித்தப்பை பிரச்சனை, பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற நோய்களும் வைட்டமின் சி குறைபாடுகளால் ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் சி அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
வைட்டமின் சி நிறைந்த கொய்யா பழம்:
கொய்யா பழத்தில் வைட்டமின் சி 628% உள்ளது. குழந்தைகளுக்கு வைட்டமின் சி குறைவாக இருந்தால் தாராளமாய் இந்த கொய்யா பழத்தினை கொடுக்கலாம். தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் வைட்டமின் சி குறைபாடு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம். மேலும் கொய்யா பழம் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துவதால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.
கீரைகள்:
கீரை வகைகளில் வைட்டமின் A, k போன்ற சத்துக்கள் போலவே 80.4 மி. கி அளவு வைட்டமின் சி சத்துக்களும் அதிகளவு இடம்பெற்றுள்ளது. கீரைகளில் அதிகமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் கிடைக்க கீரை வகைகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் |
வைட்டமின் சி உள்ள மஞ்சள் குடை மிளகாய்:
மஞ்சள் குடை மிளகாயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளது. ஒரு மஞ்சள் குடை மிளகாயில் 341 மி.கி அளவிற்கு வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகளவு கொடுக்கிறது. அன்றாட உணவுகளில் மஞ்சள் குடை மிளகாயை சேர்த்துக்கொள்வது உடலில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகரிக்கக்கூடும்.
வைட்டமின் பி12 உணவுகளும் அதன் பயன்களும்..! |
வைட்டமின் சி அதிகரிக்க ப்ராக்கோலி:
காய்கறி வகைகளில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த பிராக்கோலி. 1 கப் ப்ராக்கோலியில் 135% வைட்டமின் சி சத்துக்களும், 30% கலோரிகளும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. புற்றுநோய் உள்ளவர்கள் இந்த ப்ராக்கோலியை சாப்பிட்டு வர விரைவில் புற்றுநோயிலுருந்து விடுபடலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்க தயக்கம் இல்லாமல் ப்ராக்கோலியை சாப்பிட்டு வரலாம்.
வைட்டமின் சி உள்ள பார்சிலி:
பார்சிலி என்பது மூலிகை வகையை சேர்ந்தது. நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் போதுமான அளவிற்கு பார்சிலியில் கிடைக்கிறது. ஒரு கப் பார்சிலியில் 133% வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக கிடைக்க வேண்டுமென்றால் பார்சிலியை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |