எந்த நோய்க்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று தெரியுமா..?

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அதற்கான தீர்வு:

நாகரிக வளர்ச்சியால், நம் உணவு பழக்கமே, நமக்கு பல நோய்கள் வருவதற்கு வழி வகுக்கிறது. ‘வரும் முன் காப்போம்’ என்ற முன்னெச்சரிக்கை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

சரி, VITAMIN குறைந்ததால் எந்த நோய் வரும் என்பதையும். அதற்கான உணவு முறைகளையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

வைட்டமின் குறைபாடு A:-

பொதுவா Vitamin A ஒருவருக்கு குறைவாக உள்ளது என்றால், கண்டிப்பாக அவர்களுக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்காது. வைட்டமின் A குறைபாடு உள்ளவர்கள் தினமும் கேரட்டை உணவில் அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட்டை சமைத்தோ, ஜூஸாகவோ அல்லது பச்சையாகவோ தினமும் சாப்பிடலாம்.

இதயத்தை பாதுகாக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்

அனைத்து வகை கீரைகள், மாங்காய், மாம்பழம் மற்றும் பப்பாளி ஆகியவற்றிலும் அதிகளவு வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் A குறைப்பாடு உள்ளவர்கள் இவற்றை அதிகளவு தினமும் உட்கொண்டு வந்தால், கண்பார்வை தெளிவாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகள் வலுப்பெறும் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் B குறைபாடு:-

பொதுவாக வைட்டமின் B குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகை  இருக்கும். அதுமட்டுமின்றி அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனை ஏற்படும், குறிப்பாக இதய நோய் வருவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. விட்டமின் குறைபாட்டை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் புண்ணாக இருக்கும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:-

மீன், கோழி இறைச்சி, ஆடு இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றில் அதிகளவு இருக்கிறது. மேலும் பால் பொருட்களில், கீரை வகைகளில் அதிகளவு வைட்டமின் B நிறைந்துள்ளது.

வைட்டமின் C குறைபாடு:-

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின் C அதிகளவு பயன்படுகிறது. குறிப்பாக வைட்டமின் C குறைபாடு உள்ளவர்களுக்கு பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தினமும் வைட்டமின் C சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

அதாவது தினமும் ஆரஞ்சி, சாத்துக்கொடி, எலுமிச்சை, பப்பாளி மற்றும் கொய்யாய் ஆகியவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது என்பதால் தினமும் இவற்றை அதிகளவு உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க – அருமையான வழி..!

வைட்டமின் D குறைபாடு:-

வைட்டமின் D குறைபாடு தற்போது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பிரச்சனை. இந்த விட்டமின் குறைபாட்டுக்கு அதிகமா நாம் மாத்திரைகளை தான் எடுத்து கொள்வோம். விட்டமின் குறைபாட்டிற்கு மாத்திரை எடுத்து கொள்வது மிகவும் தவறான செயலாகும்.

ஒருவருக்கு வைட்டமின் டி சத்து குறைந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழந்து விடும்.

நாம் சாப்பிடும் உணவுகளான மீன், முட்டை, நெய் மற்றும் விதைகள் உள்ள அனைத்து காய்கறிகளிலும் இந்த விட்டமின் டி சத்து அதிகளவு உள்ளது.

எனவே தினமும் இந்த காய்கறிகளை உட்கொண்டு வந்தாலே மாத்திரை மருந்து இல்லாமலே விட்டமின் டி சத்தை அதிகரிக்க இயலும்.

வைட்டமின் E குறைப்பாடுகள்:-

வைட்டமின் E குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த உறைதல் பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக இதய நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த வைட்டமின் E எந்த உணவுகளில் அதிகளவு இருக்கின்றது என்றால் நிலக்கடலை, முந்திரி என்ற பருப்பு, மற்ற பருப்பு வகையிலும், கீரைகளிலும், அவகோடா என்ற (வெண்ணை) பழத்திலும் அதிகளவு நிறைந்தஉள்ளது.

இது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
SHARE