Walking Benefits in Tamil
தற்போதைய சூழ்நிலையில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுவும் குறிப்பாக இன்று எந்நேரமும் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக நோய்களை பரிசாக பெறுகிறோம்.
ஆனால் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடலுக்கு உழைப்பைக் கொடுக்கும் வகையில் நடைப்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது. எனவே உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.
எனவே ஒருவர் தினமும் காலை அல்லது மாலையில் 30 நிமிடம் இந்த நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தாலே, நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம்.
நடைப்பயிற்சி நன்மைகள்
நடைப்பயிற்சி நன்மைகள் :1
வாக்கிங் நன்மைகள் – தினமும் காலையில் நடைப்பயிற்சி (morning walking benefits) செய்வதினால் அதாவது கால்களால் மெல்லமாக நடப்பதை விடவும் சற்று வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளை உண்டாக்குமாம்.
குறிப்பாக காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் மூளையின் திறனை அதிகரித்து ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது. மேலும், உங்களை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைக்க வேகமாக நடை பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
நடைப்பயிற்சி நன்மைகள் :2
வாக்கிங் நன்மைகள் – உடல் எடை குறைய தினமும் காலையில் வேகமாக நடப்பதால் (morning walking benefits) உடல் எடை குறைய தொடங்கும்.
மிக பெரிய பயிற்சிகளை செய்யாமல் இது போன்ற சாதாரண பயிற்சிகளால் உடல் எடைக்கு தீர்வை தரலாம். உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகளும் இதனால் குறையும்.
நடைப்பயிற்சி நன்மைகள் :3
வாக்கிங் நன்மைகள் – பொதுவாக பலகாரணங்களினால் இந்த மன அழுத்தம் ஏற்படும் எனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உங்களை எளிதாக காப்பாற்றி கொள்ள தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது.
எனவே வேகமாக நடந்தால் இரத்த அழுத்தத்தை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். அத்துடன் இது புத்துணர்வையும் தர கூடும்.
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா? |
நடைப்பயிற்சி நன்மைகள் :4
வாக்கிங் பயன்கள் – தினமும் காலையில் வாக்கிங் (morning walking benefits) செய்வதினால் எலும்புகள் வலு பெறும்.
மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வேகமாக நடந்தாலே போதும். எலும்புகளுக்கு அதிக வலிமையை தந்து எப்போதுமே உத்வேகத்துடனே உங்களை வைத்து கொள்ளும்.
நடைப்பயிற்சி நன்மைகள் :5
வாக்கிங் பயன்கள் – தினமும் காலையில் நடைப்பயிற்சி (morning walking benefits) செய்வதினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் அதாவது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி சிறந்த ஒன்றாக விளங்குகிறது.
மேலும் இதனால் இதய நோய்களை தடுக்க முடியும். நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை பெற வேகமாக நடக்க செய்யுங்கள்.
நடைப்பயிற்சி நன்மைகள் :6
தினமும் காலையில் நடைப்பயிற்சி (morning walking benefits) செய்வதினால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை அதிகரிக்க உதவும்.
இதனால் உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானமடைவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதமும் அதிகரிக்கும். அதுவும் காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் அஜீரண கோளாறைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளையும் தடுக்கும்.
நடைப்பயிற்சி நன்மைகள் :7
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..! |
எட்டு வடிவ நடைபயிற்சி செய்வது எப்படி ?மற்றும் அதன் பயன்கள்
8 வடிவ நடைப்பயிற்சி (8 Shape walking) செய்வது இப்போது டிரெண்ட். டாக்டர்கள் சொல்லியும் நண்பர்கள் சொல்லியும் இன்டர்நெட்டில் பார்த்தும் மக்கள் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.
வேக நடை, மித நடை, நாயுடன் நடை, நண்பருடன் நடை, பேசிக்கொண்டே நடை என எத்தனையோ வகை நடைப்பயிற்சியைத் தினந்தோறும் பார்க்கிறோம். அதில் மிகவும் பிரபலமானது, பழைமையானது, சித்தர்கள் குறிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது இந்த 8 வடிவ நடைப்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!
8 வடிவ நடைப்பயிற்சி செய்வது எப்படி? (8 Shape Walking Method)
8 நடை பயிற்சி அளவு
எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வது எப்படி என்று இப்போது நாம் காண்போம் 6 அடி அகலம், 8-12 அடி நீளம் வரை ‘8’ என்ற எண்ணை வடக்கு, தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும்.
முதலில் வடக்கை நோக்கி நடக்க வேண்டும். பின்பு தெற்கை நோக்கித் திரும்பி நடக்க வேண்டும். அதாவது, முதலில் வடக்கு – தெற்கு என 15 நிமிடங்கள் சுற்றி நடக்கவும்.
பின்பு தெற்கு – வடக்கு என 15 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும். மொத்தம் அரை மணி நேரத்துக்கு நடக்க வேண்டியிருக்கும்.
8 வடிவ நடை பயிற்சி நன்மைகள் :-
தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும்.
பாதங்களும், கால்களும் பலம் பெறும்.
இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிக்கு இது மிகச் சிறந்த நிவாரணி.
கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும்.
சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டுவலி, தூக்கமின்மை என எல்லா வியாதிகளும் எந்தவிதமான மருந்து, மாத்திரைக்களுமில்லாமலே முற்றிலும் குணமாகும் என்பது அனுபவப்பூர்வ உண்மை.
எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது.
உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடை பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம்.
நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> | Whatsapp Group Link. |