வால்நட் எப்படி சாப்பிட வேண்டும்?
அனைவருக்கும் பொதுநலம்.காம் பதிவின் வணக்கங்கள் இன்று வால்நட் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெளிவாகவும், சுருக்கமாகவும் பார்க்க போகிறோம். நட்ஸ் சாப்பிடுவதால்உடலுக்கு மிகவும் நல்லதுதான். இதில் அப்படி என்ன இருக்கிறது, எப்படி சாப்பிடுவது என்றெல்லாம் யோசிப்பீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நாம் வீட்டில் இருக்கும் பாட்டி அடிக்கடி சொல்லி கொண்டிருப்பார்கள். அது போல் தான் இந்த வால்நட் சாப்பிடுவதும். இதனை சாப்பிடுவதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தில் தான் வால்நட்ஸை சாப்பிட வேண்டும். சரி வாங்க வால்நட் எப்போது சாப்பிட வேண்டும்? அவ்வாறு சாப்பிட்டால் என்ன பயன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
பிரேசில் நட்ஸ் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் |
வால்நட் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகுவோம். அவ்வாறு செல்லும் போது மருத்துவர் நம் உடலை பரிசோதித்து உடலில் சத்துக்கள் குறைவாக உள்ளது என்று கூறுவார்கள். ஆகவே நீங்கள் அதிகம் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுவார்கள். அப்பொழுது மருத்துவர் முதலில் பரிந்துரைப்பது பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றைத்தான்.
மருத்துவர் பரிந்துரைப்படி ஒரு நாளுக்கு பாதாம் பருப்பு, வால்நட்ஸ் போன்றவரை அதிகளவு சாப்பிட்டால் அது பெரிய தவறு ஏனென்றால் நட்ஸ் வகைகளில் புத்தசத்துக்கள், அதிகம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் அதனை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும்.
வால்நட் எவ்வளவு சாப்பிட வேண்டும்?
- நட்ஸ் நல்லது என்பதால் ஒரு நாளுக்கு 100 கிராம்நட்ஸ் சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு நட்ஸ் பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல.
- எந்த நட்ஸ்சாக இருந்தாலும் அதனை 20 கிராம் அல்லது 30 கிராம் அளவிற்கு நட்ஸ் சாப்பிட்டால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- பொதுவாக நட்ஸ் வகைகளை சாப்பிடும்போது, சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம்.
- ஒரு நாளுக்கு உணவு இடைவெளியில் நட்ஸ் சாப்பிட வேண்டும். அதாவது காலை உணவுக்கு பிறகு, மதிய உணவுக்கும் இடையில் சாப்பிட வேண்டும். இதுபோல் உணவுக்கு இடையில் ஒரு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
வால்நட் எப்படி சாப்பிட வேண்டும்:
வால்நட் ஒரு நாளுக்கு மூன்று முதல் ஐந்து சேர்த்து சாப்பிடலாம்.
- பாதாம் பருப்பு ஒரு நாளுக்கு நான்கு முதல் எழு வரை பாதாம் சாப்பிடலாம்.
- அத்தி ஒரு நாளுக்கு இரண்டு சாப்பிடலாம்.
- முந்திரி ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஏழு வரை சேர்த்துக்கொள்ளலாம்.
- உலர் திராட்சை ஒரு நாளுக்கு பத்து உட்கொள்ளலாம்.
- பிஸ்தா ஒரு நாளுக்கு 10 கிராம் சாப்பிடலாம்
- பேரிச்சை ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம் இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு நன்மையை அளிக்கும்.
நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |