தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? Walnut Benefits in Tamil..!

வால்நட் என்றால் என்ன?

Walnut Benefits in Tamil:- பொதுவாக நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிடுவதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும். அதாவது முந்திரி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழும். அந்த வகையில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. இந்த வால்நட்டை அக்ரூட் பருப்பு, வாதுமை பருப்பு என்றும் அழைப்பார்கள். இந்த வால்நட்டில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மிகவும் நல்லது.

அதேபோல் வால்நட்ஸில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிவிதமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இத்தகைய வால்நட்டை உணவில் ஆயிலாக சேர்த்து கொள்வதற்கு பதில், தினமும் ஐந்து வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏராளமான அற்புத நன்மைகள் நிகழும். இதன் சுவை மற்ற பருப்பு வகைகளை விட கசப்பாக இருக்கும், எனவே இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனில் கலந்து சாப்பிடலாம். சரி இந்த பதிவில் வால்நட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை (Walnut Benefits in Tamil) பற்றி படித்தறியலாம் வாங்க.

வால்நட்ஸியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

100 கிராம் வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

  1. கொலஸ்ட்ரால் – 0 கிராம்
  2. சோடியம் – 02 மில்லி கிராம்
  3. பொட்டாசியம் – 441 மில்லி கிராம்
  4. புரதச்சத்து – 15 கிராம்
  5. விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த 100 கிராம் வால்நட்டில் உள்ளது.

வால்நட் மருத்துவ பயன்கள் / Walnut Benefits in Tamil..!

வால்நட் பயன்கள்: 1

இந்த வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படுத்துகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் 5 கொடுப்பதன் மூலம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கலாம்.

மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியை போக்குவதுடன் நமது நினைவு திறனை அதிகரிக்கும்.

வால்நட் பயன்கள்: 2

தினமும் 5 வால்நட்ஸை (walnut benefits in tamil) பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் வராமல் பாதுகாப்பதில் இந்த அக்ரூட் பருப்பு சிறந்து விளங்குகிறது.

மேலும் ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் 5 வால்நட்ஸை தவறாமல் சாப்பிடுங்கள்.

அக்ரூட் பருப்பு பயன்கள்: 3

immunity

வால்நட்ஸை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது.

அக்ரூட் பருப்பு பயன்கள்: 4

சிலர் இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் அவஸ்த்தை படுவார்கள். அப்படி பட்டவரக்ள் தினமும் சாப்பிட்ட பிறகு வால்நட்ஸை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்கு என்ன காரணம் என்றால் வால்நட்ஸில் உள்ள மெலட்டோனின் (Melatonin) என்னும் ஊட்டச்சத்து நமது மூளைக்கு நல்ல ஒய்வு தந்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

வால்நட் நன்மைகள்: 5

வால்நட்ஸ் உடல் வறட்சியை போக்கும், உடல் தோல் பகுதியை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும். எனவே தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும்.

வால்நட் நன்மைகள்: 6

செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.

வால்நட் பருப்பு பயன்கள்: 7

சிலருக்கு நரம்பு பிரச்சனைகள் இருக்கும், அவர்களுக்கு அடிக்கடி வலிப்பு பிரச்சனையும் ஏற்படும் அப்படி பட்டவர்கள் தினமும் வால்நட்ஸை சாப்பிடுவதன் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.

வால்நட் பருப்பு பயன்கள்: 8

பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இந்த அக்ரூட் பருப்புக்கு உள்ளது. எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.

வால்நட் பயன்கள்: 9

weight loss

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் 5 வால்நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள். இவற்றில் உள்ள பாலின் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் வைத்து கொள்ளும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

வால்நட் பயன்கள்: 10

வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், தினமும் அந்த வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்