நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் | Water Rich Vegetables in Tamil

Water Rich Vegetables in Tamil

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் 

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்:- நாம் இந்த உலகத்தில் இருக்கும் வரை நன்கு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால். தண்ணீரை அதிகளவு அருந்த வேண்டும் என்று மாறுவார்கள் பரிந்துரைக்கின்ற. மேலும் நாள்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் நாம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் உடல் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றும் இதனால் உடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் தினமும் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது சிறப்பாக செயல்படுவதுடன், உடலில் இருக்கும் அதிகப்படியான உஷ்ணமும் தணியும்.

பொதுவாக நமது உடலில் வறட்சி ஏற்பட்டால், நிறைய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படகூட. குறிப்பாக மலச்சிக்கல், குடலியக்க கோளாறு, பைல்ஸ், சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் உங்களுக்கு வராமல் இருப்பதற்கு, போதிய நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை. அதிக நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் இருக்கின்ற. அதை உங்கள் உணவு முறையில் சேர்த்து கொண்டேலே போதும் நமது உடலில் தேவையான நீர் சத்துக்கள் கிடைத்து விடும். சரி வாங்க அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பற்றியும் அவற்றில் உள்ள தனித்துவமான மருத்துவ குணங்களையும் இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக படித்து தெரிந்து கொள்வோம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் 

வெள்ளரிக்காய்:

பொதுவாக பலருக்கு வெள்ளரிக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக இருக்கும். இந்த வெள்ளரிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. குறிப்பாக கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு காய் வகையை சேர்ந்தது, ஆகவே இந்த நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயினை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். இதனால் தங்களது உடல் வறட்சி நீங்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் குறையும்.

தக்காளி:

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும் குறிப்பாக 90% நீர்ச்சத்து தாக்களில் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும். மேலும் இதனை பச்சையாக சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை பெறலாம்.

முள்ளங்கி:

முள்ளங்கியை சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது உணவில் முள்ளங்கி இருந்தால் அதனை ஒதுக்கிவிடுவார்கள். இருப்பினும் தினமும் அல்லது ஒருநாள் இடைவேளை இட்டு நீங்கள் முள்ளங்கி சாப்பிட்டால், உடலில் இருந்து வெளியேறிய நீரை மீண்டும் பெறலாம். மேலும் இவை எளிதில் செரிமானமடைவதால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக இதனை சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.

கேரட்:

கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிகம் உள்ளது. இவை உடலுக்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேர்ட் ஜூஸ் குடித்தால், உடல் வறட்சியை நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.

பூசணிக்காய்:

நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

புடலங்காய்:

எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

பீர்க்கங்காய்:

இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

சுரைக்காய்:

ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி. உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil