தர்பூசணியின் பயன்கள் உச்சி முதல் பாதம் வரை..!

தர்பூசணி பயன்கள் (Watermelon Benefits In Tamil)..!

கோடைகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். கோடை காலம் வந்துவிட்டாலே போதும் நம் உடல் அதிகமாக வறட்சி அடையும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இந்த கோடைகாலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்சத்து வேர்வை மூலமாக வெளியேறும், இதனால் உடல் எளிதில் வறட்சியடைந்து சருமம் பொலிவிழந்து காணப்படும், எப்பொழுது பார்த்தாலும் தாகமாக இருக்கும், மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சிறந்த அற்புதமான பழமாக தர்பூசணி விளங்குகிறது. கோடையில் மிக எளிதாக கிடைக்கும் இந்த தர்பூசணியில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.

நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

 

குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. இது உடலுக்கு தரும் எண்ணற்ற நன்மைகள் (watermelon benefits in tamil) என்ன என்பதை பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..!

தர்பூசணி நன்மைகள் (Watermelon Benefits In Tamil)..!

தர்பூசணி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:

உடல் நலத்திற்கு அதிக ஊட்டச்சத்து அளிக்க கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இந்த தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் கார்போ ஹைட்ரேட் ஆகியவை உள்ளது.

100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்து, 46% கலோரிஸ் மற்றும் 6% கார்போ ஹைட்ரேட் உள்ளது.

இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது. மேலும் தர்பூசணியில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.  இத்தகைய தர்பூசணியை, தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளும் சரியாகும்.

தர்பூசணி பயன்கள் – உடல் வறட்சி நீங்க

கோடையில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபமாக வறட்சி அடைகின்றது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது.

கோடை காலங்களில் கிடைக்கின்ற சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது. மேலும் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.

தர்பூசணி பயன்கள் – சிறுநீரக பிரச்சனைக்கு:

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, நீர் தாரைகளில் ஏற்படும் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.

லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

தர்பூசணி பயன்கள் – இதயத்தை பாதுகாக்க:

மேலும் தர்பூசணியில் 11% விட்டமின் A, 13% விட்டமின் C மற்றும் பொட்டாசியம் இருப்பதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கின்றது. மேலும் நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தர்பூசணி பயன்கள் – கர்ப்பிணிகளுக்கு

பெண்களை பொறுத்தவரை கர்ப்பகாலங்களில் அதிகளவு தர்பூசணி பழத்தை  சாப்பிட்டு வர குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தர்பூசணி பயன்கள் – மலச்சிக்கல் பிரச்சனைக்கு:

 

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது.

தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருகிறது.

தர்பூசணி பயன்கள் – சரும பிரச்சனைகளுக்கு:

தர்பூசணியில் உள்ள விட்டமின் சி மற்றும் பீட்டாகரோடின் இரண்டும் ஆன்டி ஆக்சிடண்டுகளாக செயல்பட்டு சருமத்தில் கோலாஜின் உற்பத்தியை அதிகரிக்கும்.

மேலும் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், சரும வறட்சி, சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தர்பூசணி பயன்கள் – கண்பார்வைக்கு:

தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

தர்பூசணி பயன்கள் – உடல் எடை குறைய

உடல் எடை குறைய தர்பூசணி பழம் உதவுகிறது.  தினந்தோறும் காலையில் தர்பூசணி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பு உடலில் சேராமலும் தடுக்கும்.

கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil