எவ்வளவோ ட்ரை பண்ணியும் ஒல்லியாகவே இருக்கிறோம் என்று கவலை படுகிறீர்களா.! இதை ட்ரை பண்ணுங்க நண்பர்களே.!

weight increase tips in tamil

உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே.! ஒல்லியாக இருப்பவர்கள் வெளியில் சென்றாலே சாப்பிடுறியா இல்லையா என்று கேட்பாரக்ள். இல்லையென்றால் பெற்றோர்களிடம் கேட்பார்கள் சாப்பாடு போடுறிங்களா இல்லையா என்று கேட்பார்கள். உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை தான், உடல் எடை குறைவாக இருந்தாலும் பிரச்சனை தான். உடல் எடை அதிகரிப்பதற்காக மாத்திரைகள், டானிக் இன்னும் பல முறைகளில் ட்ரை செய்வீர்கள். ஆனால் இது போல் செய்து உடல் எடை அதிகரித்தாலும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க.

உடல் எடை அதிகரிக்க எளிமையான டிப்ஸ்:

சாப்பிடும் முறை:

நீங்கள் சாப்பிடும் முறை 3 தடவை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதை 5 தடவையாக மாற்றுங்கள். ஒரே முறையாக வயிறு முழுவதும் சாப்பிட முடியாது. அதனால் தான் சாப்பிடுவதை கொஞ்சமாக சாப்பிட்டாலும் அடிக்கடி சாப்பிடுங்கள்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்:

Carbohydrates Food List in Tamil

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். முக்கியமாக அரிசியில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது உடல் எடை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ ஒரே மாதத்தில் உடல் எடை அதிகரிக்க இதை சாப்பிடுங்க..

பயறு வகைகள்:

பயறு வகைகள்

ஆயில் நிறைந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து புரோட்டீன், பயறு வகைகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

மில்க் ஷேக்:

டீ, காபி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு டம்ளர் பால் எடுத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளுங்கள். பின் நேந்திரம் வாழைப்பழம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த மில்க் ஷேக்கை காலை உணவு சாப்பிட்ட பிறகு உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் குடிக்கலாம். இப்படி குடிக்கும் போது உடல் எடை அதிகரிக்கும்.

ஸ்னாக்ஸ்:

 சாப்பிடும் முறை

அடுத்து உளுந்தில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். எள் மிட்டாய், கடலை மிட்டாய், பேரீட்சைப்பழம், பாதாம் போன்றவையை ஸ்னாக்ஸாக எடுத்து கொள்ளுங்கள்.

ஊற வைத்த கொண்டைக்கடலை பயன்கள்:

ஊற வைத்த கொண்டைக்கடலை பயன்கள்

ஒரு இரவு முழுவதும் கொண்டக்கடலை மற்றும் உலர் திராட்சை போன்றவற்றை ஊற வைத்து கொள்ளுங்கள். மாறு நாள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். உடல் எடை கண்டிப்பாக அதிகரிக்கும்.

மேல் கூறப்பட்டுள்ளதை 1 மாதம் தொடர்ந்து செய்யுங்கள். உடல் எடை கண்டிப்பாக அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ ஆரோக்கியமாக அழகாக உடல் எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்