Weight Loss Diet Plan in Tamil
உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் உணவு மற்றும் வாழ்க்கை முறையினால் உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடை அதிகமாக இருக்கிறதே என்று திருமண வயது வரும் போது தான் அதை நினைத்து கவலைப்படுவார்கள். அப்போ தான் உடல் எடையை குறைப்பதற்கு பல முறைகளை கையாள்வார்கள். ஆனால் சில நபர்களுக்கு பலனை அளித்திருக்கும், சில நபர்களுக்கு ரிசல்ட் கொடுத்திருக்காது. அதனால் தான் இன்றைய பதவில் உடல் எடையை குறைப்பதற்கு உணவு திட்டத்தை பற்றி பதிவிட்டுள்ளோம். அதை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
5 Day Weight Loss Diet Plan in Tamil:
முதல் நாள்:
முதல் நாள் காலையில் டீ, காபி, பால் போன்றவை குடிக்காமல் வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் கஞ்சியில் பால் சேர்த்து குடிக்கலாம்.
மதிய உணவாக ஒரு கிண்ணம் பருப்பு, ஏதவாது ஒரு சப்ஜி, ஒரு ரொட்டி, ஒரு கப் சாதம் போன்றவை சாப்பிட வேண்டும்.
இரவு உணவாக ஒரு ரொட்டி சாப்பிடவும், பசி அடங்கவில்லை என்றால் பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்.
இரண்டாவது நாள்:
இரண்டாவது நாள் காலை உணவாக 2 சோள மாவு தோசை, 1/2 கிண்ணம் தயிர் சேர்த்து சாப்பிடவும்.
மத்திய உணவாக ஒரு கப் தால், ஒரு கப் காய்கறிகள், ஒரு ரொட்டி, இரவு உணவாக 2 ரொட்டி, பன்னீரில் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிடலாம்.
மூன்றாவது நாள்:
மூன்றாவது காலை உணவாக ஒரு கப் பழங்கள், மதிய உணவாக பன்னீர் சேர்க்கப்பட்ட காய்கறிகள் ஒரு கப், இரவு உணவாக ஒரு கப் காய்கறியை மட்டும் சாப்பிட வேண்டும்.
நான்காவது நாள்:
நான்காவது நாள் காலை உணவாக 2 ஆம்லெட், மத்திய உணவாக ஒரு கப் காய்கறிகள், இரவு உணவாக 1/2 கப் சாதம் எடுத்து கொள்ளவும்.
ஐந்தாவது நாள்:
ஐந்தாவது நாள் காலை உணவாக காய்கறி உப்புமா, மதிய உணவாக காய்கறி மற்றும் பன்னீரால் செய்யப்பட்ட ரொட்டி, இரவு உணவாக 1 ரொட்டி போன்றவை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமாக உடல் எடையை குறைப்பதற்கு:
மேல் கூறப்பட்டுள்ள உணவு அட்டவணையும் பின்பற்றி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு சில வழிமுறைகள் கட்டாயம் வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாது.
உணவை சரியான நேரத்திற்கும், இடைவெளி சரியாகவும் இருக்க வேண்டும். நினைத்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
தினமும் தண்ணீர்அதிகமாக குடிப்பது உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்றுவதற்கு உதவுகிறது. அதனால் தினமும் 3 லிட்டர் அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.இனிப்பு வகைகள், பிஸ்கட் மற்றும் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |