உடல் எடையை குறைப்பது எப்படி
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உடல் எடையை வேகமாக குறைக்க சில நீர் ஆகாரங்கள் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே சிலர் குண்டாக இருப்பார்கள் அவர்களுக்கு உடல் எடையை எப்படி குறைப்பது என்று கவலையாக இருக்கும். நாம் சாப்பிடும் சில உணவு முறைகளும் உடல் எடையை அதிகரிப்பதற்கு காரணமாகவும் உள்ளது.
இவை பொதுவாக ஆண்கள், பெண்கள் இருவருக்குமே ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இதனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் உடல் எடை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சிகள் எடுத்து வந்தாலும் கடைசியில் எந்த பயனும் கிடைப்பது போல் இல்லை. இந்த உடல் எடையை சீக்கிரமாக குறைப்பதற்கு சில நீர் ஆகாரங்களே போதுமானது. இது போன்ற நீர் ஆகாரங்களை எப்படி தயாரித்து குடிப்பது என்பதை பற்றி நம் பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க.
உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர் |
உடல் எடையை வேகமாக குறைக்க:
உடலில் தங்கியிருக்கும் தேவை இல்லாத சில கழிவுகளை வெளியேற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகவும், அந்த வகையில் வீட்டில் தயாரிக்கப்படும் சில நீர் பானங்கள் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதை பற்றி பார்க்கலாம்.
ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை ஒரு கிண்ணத்தில் கொதிக்க வைத்து அதில் வெட்டிவேர் சேர்த்து கொத்திக்க வைத்து, அதை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைவதற்கு உதவியாக இருக்கிறது.
அதே போல் தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து அதில் மல்லி விதையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதை குடிப்பதால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இரவு தூங்குவதற்கு முன் சீரகத்தை ஊறவைத்து காலை எழுந்ததும் அதே தண்ணீருடன் கொத்திக்க வைத்து அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
அதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பு தேன் சாப்பிட்டு தூங்குவதால் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
லவங்கம் பட்டையை இரவு உறங்குவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைத்து அதை தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைவதற்கு உதவியாக இருக்கிறது. இதில் சொல்லிருக்கும் அனைத்து மருத்துவ குணகளையும் தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை வேகமாக குறைவதை உங்களால் அறிய முடியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |