உடல் எடையை குறைக்க உதவும் 5 டயட் உணவுகள்..!

Advertisement

Weight Loss Foods in Tamil

உணவின் மூலமாக உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்று நாம் உடல் எடையை குறைக்க உதவும் 5 டயட் உணவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இங்கு கூறப்பட்டுள்ள உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வதுடன், தினமும் காலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி, அரைமணி நேரம் உடற் பயிற்சி என்று தினமும் செய்து வந்தாலே போதும் உடல் எடையை மிக எளிதாக ஒரு மாதத்திலேயே குறைத்துவிட முடியும். உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்றாலும் கூட தினமும் கண்டிப்பாக ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. சரி வாங்க உடல் எடையை குறைக்க உதவும் 5 டயட் உணவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சியா விதை:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக தேர்வு செய்வது மிகவும் சிறந்தது, ஏன் என்றால் இந்த சியா விதைகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது தவிர்க்கப்படுகிறது. தெளிவாக கூறவேண்டும் என்றால் இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். மேலும் இவற்றில் இருக்கும் புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு பொருள் போதும் உங்கள் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க..!

கடல் மீன்:

பொதுவாக கடல் உணவுகளில் அதிகளவு புரதம் சத்து உள்ளது. மேலும் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல் உணவுகளை தேர்வு செய்யலாம் ஏனென்றால் அதில் நம் உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன், சால்மன், மத்தி மற்றும் டுனா போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று 2019-ஆம் ஆண்டு நடைபெற்றே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலுவை காய்கறிகள் – Cruciferous vegetables:

சிலுவை காய்கறிகளில் ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் முட்டைக்கோஸ் மற்றும் அருகுலா போன்ற கருமையான இலை கீரைகள் அடங்கும். இந்த காய்கறிகளை வாரம் முழுவதும் உங்கள் உணவு பட்டியில் சேர்த்து வர உங்கள் உடல் எடையை மிக எளிதாக குறைக்க இந்த சிலுவை காய்கறிகள் உதவி செய்யும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தண்ணீரை வைத்து இப்படியெல்லாம் கூட உடல் எடையை குறைக்கலாமா..? தெரிலைனா தெரிஞ்சுக்கோங்க..!

முழு தானியங்கள்:

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி உங்களது உணவு முறையில் முழு தானியங்களை தேர்வு செய்யலாம். இந்த முழு தானியங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளது. இது தவிர முழு தானியங்களான முழு கோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவிசெய்க்கிறியாது.

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட் உங்கள் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் உண்மையில் டார்க் சாக்லேட் உடல் உடையை குறைக்க உதவி செய்கிறது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடு வர உங்கள் உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்றால் டார்க் சாக்லேட் உங்கள் நீண்ட நேரம் பசியை குறைகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடையை இப்படி கூட குறைக்க முடியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil
Advertisement