மிக வேகமாக எடையை குறைக்கும் தோசை மற்றும் சட்னி செய்வது எப்படி?

Advertisement

Weight Loss Dosa Recipe in Tamil

உடல் எடையை குறைக்க பலபேர் பலமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உடற்பயிற்சிகள் செய்வது, மருத்துவர்களிடம்  செல்வது, உணவுக்கட்டுப்பாடுகள் போன்ற பல வழிகளில்  எடையை குறைக்க முயற்சி செய்து வருகின்றன. சிலர் மிக குறைவாக சாப்பிடுகின்றனர், சிலர் ஃபாஸ்டிங் இருக்கின்றனர் , சிலர்  3 வேளை உணவு சாப்பிடாமல் 2 வேளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.

உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடுகள் அவசியம். தவறான உணவு முறைகளினாலும் உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடையினை குறைக்க ஆரோக்கியான உணவு முறைகளை தினசரி சரியாக பின்பற்றியும்  உடல் எடையினை குறைக்கலாம். இப்போது நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான தோசை செய்வது என்பதனை பற்றித்தான். இந்த தோசை உங்கள் எடை குறைக்க  உதவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • பாசி பயிறு – 100 கிராம்
  • பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • குடைமிளகாய் – 1
  • இஞ்சி – சிறு துண்டு
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

குடைமிளகாய் – எடை குறைக்க நன்கு உதவி செய்யும்.

இஞ்சி – ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

கருவேப்பிலை – அதிக அயன் சத்து உள்ளது, உடல் எடையை குறைக்க உதவும், முடி வளர உதவும், கண்ணிற்கும் நல்லது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரினை அகற்றக்கூடியது.

👉வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

செய்முறை:

ஸ்டேப் 1:

pachai payiru dosa in tamil

  • பாசி பயிரை 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பச்சரிசியை 3 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2:

weight loss recipe in tamil

  • ஊறவைத்துள்ள பச்சை பயிறு, பச்சரிசி, குடைமிளகாய், இஞ்சி சிறு துண்டு, காரத்திற்க்கு ஏற்ப பச்சை மிளகாய் ,சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3:

weight loss food tips in tamil

  • அரைத்த மாவுடன் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தோசை ஊற்றும் பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 4:

  • அதனை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப் 5:

  • பிறகு மாவினை தோசைக்கல்லில் நல்லெண்ணய் விட்டு தோசையாக  ஊற்ற வேண்டும்.

natural weight loss foods in tamil

👉7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

தோசைக்கு சட்னி தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  • வரமிளகாய் – 6
  • கருவேப்பிலை – தேவைக்கேற்ப சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு – 7 பல்
  • தக்காளி – 2
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப் 1:

weight loss tips in tamil

  • வரமிளகாயினை லேசாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2:

  • முதலில் வரமிளகாயினை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன்  கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் தேவைக்கேற்ப உப்பு  இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

weight loss tips at home in tamil

ஸ்டேப் 3:

  • பின் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காய தூள், கருவேப்பிலை போன்றவற்றை போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.

ஸ்டேப் 4:

  • பின் அதனுடன் அரைத்துவைத்துள்ள சட்டினியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 5:

  • பின் சட்டினியை நன்கு கலந்து விட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு பச்சை வாடை போக வேகவைத்து இறக்கவும்.

👉உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!

weight loss foods in tamil

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement