பெண்களுக்கு அடி வயிறு வலிக்க காரணம் என்ன தெரியுமா

what causes lower abdominal pain in females in tamil

பெண்களுக்கு அடி வயிறு வலிக்க காரணம்

அடிவயிற்று வலி என்பது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது. வயிற்று வலி என்றாலே தாங்கிக்கொள்ள முடியாது ஆனால் பெண்கள் மாதம் மாதம் அந்த வலியை தாங்கிக்கொள்ள கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமாக வருவது அடிவயிறு வலி தான் இருக்கிறது.

சிலர் உடலில் சத்துக்கள் குறைவதால் ஏற்படுகிறது என்பார்கள் ஆனால் உண்மையில் பெண்களுக்கு அடிவயிறு வலிக்க காரணம் என்ன என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான் ஆகையால் இந்த பதிவின் வாயிலாக பெண்களுக்கு அடிவயிறு வலி ஏன் வருகிறது என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம் வாங்க..!

பெண்களுக்கு அடி வயிறு வலிக்க காரணம்:

பெண்களுக்கு அதிகமாக மாதவிடாய் காலத்தில் அடிவயிறு வலிக்கும். அதேபோல் அந்த நாட்கள் முதுகு வலி, இடுப்பு வலி, கால் நரம்பு முதல் இழுத்துக்கொண்டு இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக அடிவயிற்று வலி ஏற்படுத்த மூன்று காரணம் உள்ளது இந்த மூன்று நோய் இருந்தால் அவர்களுக்கு அடிவயிறு வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை 35 வயது மேல் ஆன பெண்களுக்கும் பாதிப்பு  ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

35 வயதுக்குள் மேல் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுத்தவர்க்கு முக்கிய காரணம் கர்ப்ப பையில் இருக்கும் குறைபாடு தான். இந்த வலி மாதவிடாய் காலத்திற்கு 15 நாட்களுக்கு, முன்பு தொடங்கும். அதன் பின் மாதவிடாய் நேரத்தில் 3 நாட்களுக்கு பிறகு படிப்படியாக குறைய தோன்றும்.

இது 15 நாட்களுக்கு பிறகும் நிற்காமல் தொடர்ந்து வலி ஏற்பட்டால் அதனை ஊற்று கவனித்து பாருங்கள். இதை தான் உதிரக்கட்டிகள் என்று சொல்லக்கூடிய Endometriosis  என்பார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பெண்களின் அடி வயிறு வலி குணமாக இயற்கை மருத்துவம்

Adenomyosis Symptoms in Tamil:

கர்ப்பப்பை வீக்கத்தை கொண்டிருந்தால் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். கர்ப்பப்பை வாழ் என்று சொல்லக்கூடிய சுவர்களின் தடிமன் சற்று அதிகமாக இருக்கும். மாதவிடாய் நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கும் போது தடிமனானது அழுத்தமாக சுருங்கும். அந்த நேரத்தில் தான் அதிக வயிற்று வலியை ஏற்படுத்தும். இதையும் அடிவயிறு வலிக்க காரணமாக இருக்கும்.

அதேபோல் மாதவிடாய் காலத்திற்கு முன்பே அடிவயிறு வலிக்கும். கர்ப்பப்பை உள்ளே அல்லது வெளியே கட்டிக்கள் இருக்கும். அல்லது கர்ப்பப்பை திசுக்கள் இருக்கலாம். வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் உதிரப்போக்கு கட்டிகளும் வெளியேறும். மாதவிடாய் கால வலி என்று அலட்சிய படுத்தினால் கட்டிகள் வளர்ந்து பெரிதாகும். அவை சிறுநீர்ப்பை, மலக்குடலை அழுத்தி மேலும் அடிவயிறுவலியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படி தொடந்து அடிவயிறு வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அறிவுரை பெற்று அதற்கான சிகிச்சை பெறவும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips