30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன நடக்கும்
நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமான உணவுகள் இல்லை. அவை எல்லாவற்றிலும் சுவைக்காகவும், கலருக்காகவும் பல கெமிக்கல் நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. நீங்க ஒரு வாரத்திற்கு கடையில் உணவுகள் வாங்கி சாப்பிட கூடாது என்று முதோய்த்தெடுத்து செயல்படுத்துங்கள் அவற்றால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் உடலிற்கு பல தீமைகளை வழங்குகிறது. அதனால் இதனை ஒரு மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் என்ன தான் உடலில் நடக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சர்க்கரையை குறைத்த சில நாட்களில்:
சர்க்கரையை குறைத்த சில நாட்களிலே எரிச்சல், சோர்வு, பதட்டம் அல்லது ஆற்றல் குறைவக இருப்பதை உணரலாம். ஏனென்றால் இதன் மூலம் உங்களின் மூளைக்கு சர்க்கரை வழங்கும் டோபமனை உறிஞ்சிக்கிறது.
உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது. இரத்த குளுக்கோஸை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் உல் கொழுப்பை குறைத்து உடல் எடையை சரியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது
மூன்றாவது வாரத்தில்:
மூன்றாவது வாரத்திற்கு மேல் சர்க்கரையை தவிர்க்கிறீர்கள் என்றால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. முகத்தில் உள்ள பருக்கள், பள்ளங்கள் போன்ற பிரச்சனை வராமல் பாதுக்காக்கிறது. வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. உடலிலுள்ள இன்சுலின் அளவு குறையும் போது இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நிறைந்த ஜூஸ்கள், இனிப்பு வகை உணவுகள், பேக்கரி பொருட்கள் போன்ற உனவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, ஆரோக்கியமான பழங்கள், நட்ஸ், பால் போன்ற சத்தான உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் கிடைக்கிறது.
காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
பழங்கள் மற்றும் பால் உணவுகளில் இருக்கும் சர்க்கரை ஆனது உடலிற்கு குறைவான பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனென்றால் இவை சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கி நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளை எடுத்து கொள்ளும் போது டைப் 2 நீரழிவு நோய், கொழுப்பு கல்லீரல், இதய நோய் போன்ற பிரச்சனைகளிலுருந்து நம்மை பாதுகாக்கும்.
நீங்கள் 30 நாட்கள் சர்க்கரை இல்லாத உணவு எடுத்து கொள்வதால் சுவை உணர்வுகளை மீட்டமைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |














