வீசிங் எதனால் வருகிறது.? | What is The Reason For Wheezing in Tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீசிங் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார். வீசிங் என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகும். இதனால் மூச்சு திணறல், உடல் இளைப்பு, இருமல் போன்றவை ஏற்படும். மூச்சு விடும் போது விசில் சத்தம் போன்று கேட்கும் இதைத்தான் மருத்துவர்கள் வீசிங் என்று சொல்கிறார்கள். இந்த வீசிங் குளிர்காலத்தில் தான் அதிகமாக வருகிறது. வீசிங் எதனால் வருகிறது..? வந்தால் தடுக்கும் முறைகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
வீசிங் வர காரணம்:
சுவாச குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக வீசிங் பிரச்சனை ஏற்படலாம். மூச்சுக்குழாய் தடுக்கப்படும் போதும், வீக்கமடையும் போதும், நாள்பட்ட ஆஸ்துமா பிரச்சனை இருந்தாலும் வீசிங் ஏற்படுகிறது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீசிங் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு வீசிங் பிரச்சனை ஏற்படலாம்.
வயிற்றில் அமில தன்மை அதிகமாகும் போது வீசிங் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல் அழற்சி பிரச்சனை உள்ளவர்களுக்கும், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கும் வீசிங் ஏற்படுகிறது.
சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு இப்பிரச்சனைகள் அதிகமாகவே உள்ளது. மேலும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு வீசிங் பிரச்சனை அதிகமாக உண்டாகும்.
ஆஸ்துமா உணவு வகைகள் |
வீசிங் பிரச்சனைக்கு என்ன தீர்வு.?
வீசிங் பிரச்சனை குறைவாக இருக்கும் போதே அதை தடுத்து கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தே இப்பிரச்சனையை தடுக்க என்னென்ன செய்யவேண்டும்..? என்று பின்வருமாறு பார்க்கலாம்.
தடுக்கும் முறைகள்:
சுவாச பயிற்சிகள்:
வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் மூச்சு பயிற்சி செய்து வரவேண்டும். மூச்சுப்பயிற்சி செய்தால் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் நீங்கி வீசிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும்.
மூலிகை டீ:
தொண்டையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிக்க சூடான மூலிகை டீ குடிக்கவேண்டும். இது தொண்டை குழாய்க்கு இதமளித்து சுவாச பாதையை தளர்த்தி மூச்சு விடுதல் பிரச்சனையை குறைக்கிறது.
மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் |
புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்:
புகைப்பிடிப்பதால் நுரையீரல் எரிச்சலடைந்து சுவாச பாதை வீக்கமடைகிறது. எனவே வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வீசிங் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும்:
வீசிங் பிரச்சனை அதிகமாகி மூச்சுவிட கஷ்டப்படும் போது கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
மூச்சு திணறல், மார்பு வலி, காய்ச்சல், கால்களில் வீக்கம், குரல் இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |